சத்தமின்றி சம்பவம்.. சீனாவுடன் இரவோடு இரவாக டிரம்ப் செய்த ஒப்பந்தம்.. கேம் ஓவர்.. அடுத்து இந்தியா?
நியூயார்க்: சீனாவுடன் அரிய கனிமங்கள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் முடிவிற்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று சீனாவுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் "மிகப் பெரிய" ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் சூசகமாக தெரிவித்தார்.

பிக் பியூட்டிஃபுல் பில் நிகழ்வில் உரையாற்றிய டிரம்ப், வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசியபோது, " நாங்கள் நேற்று சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். மிகச் சிறந்த ஒப்பந்தங்கள் இதில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அடுத்து இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் வரவுள்ளது.. இது மிக முக்கியமானதாக இருக்கும். எங்களின் வர்த்தகம் இதில் புதிய நிலையை அடையும்.
ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை. சில நாடுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி, மிக்க நன்றி என்று கூறி, 25, 35, 45 சதவீதம் செலுத்த வேண்டும் என்று கூறுவோம். அவர்களிடம் கண்டிப்பாக இருப்போம். அதுதான் சுலபமான வழி. எல்லோரிடமும் எங்களால் இறங்கி செல்ல முடியாது என்று டிரம்ப் கூறி உள்ளார்.
சீனாவுடனான ஒப்பந்தத்தின் விவரங்களை டிரம்ப் வெளிப்படுத்தவில்லை. ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், சீனா அமெரிக்காவுக்கு அனுப்பும் அரிய கனிமங்களின் ஏற்றுமதியை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது என்று உறுதிப்படுத்தினார். இது இதற்கு முன்பு உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக வரி விதிப்பு தொடர்பான வெளியுறவுக்கொள்கை இறுதி செய்யப்பட உள்ளன. இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மீது அமெரிக்கா 26 சதவிகித வரி விதிப்பை போடுகின்றது. இதை குறைக்கும் விதமாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. முக்கியமாக இந்தியாவில் நடக்கும் திட்டங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் டெண்டர் எடுக்கும் விதமாக சில சலுகைகள் இந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு 500 பில்லியன் டாலர் அளவிற்கு இதனால் வருவாய் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பாய்ச்சல்
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் சார்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க உள்ளனர். இந்தியாவிற்கு முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தலைகள் விரைந்து உள்ளனர்.
பாகிஸ்தான் மீது அமெரிக்கா 29% வரி விதிப்பை மேற்கொண்டு உள்ளது. பாகிஸ்தான் காரணமாக அமெரிக்காவிற்கு 3 பில்லியன் டாலர் வர்த்தக வரி இழப்பு உள்ளது. இதை சரிக்கட்டும் வகையில், அமெரிக்காவை சமாதானம் செய்யும் வகையில் பாகிஸ்தான் தலைகள் அமெரிக்காவிற்கு விரைந்துள்ளனர்.
இந்தியா அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் பாகிஸ்தான் அவசர அவசரமாக டிரம்ப்பை சந்திக்க முயன்று வருகின்றது.
-
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications