திருப்பி திருப்பி போனை போட்ட வெள்ளை மாளிகை.. டிரம்ப் போன் காலை எடுக்காத சீன அதிபர் ஜி ஜின்பிங்! ஷாக்
நியுயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பாக வெள்ளை மாளிகையில் இருந்து செய்யப்பட்ட போன் அழைப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு முறைக்கும் மேலாக போன் அழைப்பை மேற்கொள்ள வெள்ளை மாளிகையில் இருந்து முயன்று உள்ளனர்.
ஆனால் இதை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இரண்டு நாட்டு உறவு கடுமையான சிக்கலுக்கு உள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

சீனா - அமெரிக்கா இடையே வரிப்போரில் யார் வெற்றி பெறுவார்கள்?
சீனாவை விட அமெரிக்காதான் சீனாவை அதிகம் நம்பி இருக்கிறது. சீனா அமெரிக்காவை நம்பி இல்லை. அமெரிக்கா சீனாவின் பொருட்கள் இன்றி இயங்க முடியாது. சீனாவின் உற்பத்தி அந்த அளவிற்கு அதிகம் உள்ளது. இதனால் சீனாவின் பொருட்கள் இன்றி அமெரிக்கா கடுமையாக பாதிக்கும். அதோடு சீனா அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வர்த்தக போரின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
அமெரிக்காவிலிருந்து சீனா எவ்வளவு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்கிறது?
2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் $524.7 பில்லியனாக மதிப்பிடப்பட்டது, அதே சமயம் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கான இறக்குமதியானது $163.6 பில்லியன் ஆகும். அதேபோல் 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா $524.7 பில்லியன் மதிப்பிலான பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து $163.6 பில்லியன் டாலர்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது.
சீன அதிபர் கோபம்
ஏற்கனவே சீனாவை அமைதிப்படுத்துவதற்காக மின்னணு உபகரணங்களுக்கு அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனங்கள் இதனால் நிம்மதி அடைந்துள்ளன. இதன் மூலம் பரஸ்பர கட்டண போரில் சீனா வென்றுள்ளது. அதாவது சீனாவிடம் அடிபணிய வேண்டிய கட்டத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டு உள்ளது.
சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி எவ்வளவு வரி விதிக்கின்றன?
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.
தற்போது நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34% வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர கட்டணங்களிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டு உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளை நம்பியிருக்கும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அனைத்து கணினிகள், மடிக்கணினிகள், டிஸ்க் டிரைவ்கள் மற்றும் தானியங்கி எந்திரங்கள், ஏஐ பயன்பாடுகளுக்கு பயன்படும் சிப்கள், 8471 குறியீடு கீழ் வரும் தொழில்நுட்ப பொருட்கள் உட்பட 20 தயாரிப்பு பொருட்களுக்கான பரஸ்பர வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. குறைக்கடத்தி சாதனங்கள், உபகரணங்கள், சீப்புகள் மற்றும் பிளாட் பேனல் டிஸ்க்குகள் ஆகியவை மீதான வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பரஸ்பர கட்டண போரில் சீனா வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications