நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெட்டதிலும் ஒரு நல்லது.. டெல்டாவை காலி செய்யும் ஓமிக்ரான்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் குட் நியூஸ்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவுவது கெட்ட விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு நல்ல விஷயமும் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்கா அரசின் வேக்சின் ஆலோசகர் மருத்துவர் ஏஞ்சலிக் கொயட்ச்சி இதுகுறித்து விரிவாக விளக்கி உள்ளார்.

Recommended Video

    US Economyஐ பாதிக்கும் Omicron! அப்போ India? | OneIndia Tamil

    ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் புதிய பயன் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 120க்கும் மேற்பட்டோரிடம் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

    தென்னாப்பிரிக்காவில்தான் இது முதலில் கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதால் இதை கவலை அளிக்க கூடிய வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

    ரம்யா கிருஷ்ணனை பார்க்கும்போது என்னை பார்த்த மாதிரியே இருந்தது...உணர்ச்சிவசப்பட்ட ஐக்கிரம்யா கிருஷ்ணனை பார்க்கும்போது என்னை பார்த்த மாதிரியே இருந்தது...உணர்ச்சிவசப்பட்ட ஐக்கி

    நல்ல விஷயம்

    நல்ல விஷயம்

    ஆனால் அதே சமயம் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவுவதில் ஒரு நல்ல விஷயமும் இருப்பதாக பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்கா அரசின் வேக்சின் ஆலோசகர் மருத்துவர் ஏஞ்சலிக் கொயட்ச்சி இதுகுறித்து விரிவாக விளக்கி உள்ளார். இவர்தான் முதல் முதலில் ஓமிக்ரான் வகை கொரோனாவை கண்டறிந்தது. அவர் அளித்துள்ள பேட்டியில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மிக மிக லேசான கேஸ்கள் மட்டுமே வருகின்றன.

    நிறைய கேஸ்கள்

    நிறைய கேஸ்கள்

    தினசரி நிறைய கேஸ்கள் வருகின்றன. இது வேகமாக பரவுகிறது. ஆனால் ஓமிக்ரான் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட எல்லோருமே மைல்ட் கேஸ்கள்தான். அதாவது இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது இல்லை. வீட்டில் இருந்தபடியே இவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது. பலருக்கு வாசனை, சுவை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படவில்லை.

     உடல்நிலை

    உடல்நிலை

    மிக மிக லேசான காய்ச்சல்தான் உள்ளது. இதுவரை ஓமிக்ரான் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சீரியஸ் ஆகவில்லை. எல்லோரையும் சாதாரண வார்டில் வைத்துதான் சிகிச்சை அளித்து வருகிறோம். கொரோனா போல இது ஆபத்து கொண்டது இல்லை. ஓமிக்ரான் மூலம் யாரும் பலியாகவில்லை. இதனால் யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

    நல்லது

    நல்லது

    இந்த இடத்தில்தான் ஓமிக்ரான் காரணமாக நல்ல செய்தி வந்து இருப்பதாக தென்னாபிரிக்க மருத்துவர் மார்க் வான் ரான்ஸ்ட், இஸ்ரேல் அரசு மருத்துவ ஆலோசகர் டிரார் மெஸ்ரோச் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன்படி ஓமிக்ரான் குறித்து இதுவரை வந்துள்ள தகவல்களின்படி அது வேகமாக பரவுகிறது. ஆனால் குறைவான ஆபத்து கொண்டுள்ளது. அதாவது இது டெல்டா வைரஸ் பரவியதை விட தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவுகிறது.

    மற்ற நாடுகள்

    மற்ற நாடுகள்

    மற்ற நாடுகளிலும் ஓமிக்ரான் டெல்டாவை விட வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆபத்து கொண்ட டெல்டாவை விட ஆபத்து குறைவான ஓமிக்ரான் விஞ்சும் வாய்ப்பு உள்ளது. டெல்டாவிற்கு பதிலாக ஓமிக்ரான் உலக அளவில் டொமினன்ட் வைரஸாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் டெல்டாவை பின்னுக்கு தள்ளி ஓமிக்ரான் பரவி வருகிறது. இதே நிலை நீடித்தால் உலகம் முழுக்க டெல்டாவிற்கு பதிலாக ஓமிக்ரான் பரவும்.

    ஓமிக்ரான் நல்லது

    ஓமிக்ரான் நல்லது

    இதனால் டெல்டாவின் இடத்தை ஓமிக்ரான் பிடிக்கும். ஆபத்து நிறைந்த டெல்டா பரவலை ஓமிக்ரான பரவல் கட்டுப்படுத்தும். டெல்டா வந்தால் மருத்துவமனையில் சேர வேண்டும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் ஓமிக்ரான் அப்படி இல்லை. எனவே ஓமிக்ரான் ஆபத்து குறைவாக இருப்பதாக வரும் முதல் கட்ட செய்திகளால், உலகம் முழுக்க பலி எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். ஓமிக்ரான் பரவுவது நல்ல செய்தி என்று மொத்தமாக சொல்லிவிட முடியாது. ஆனால் இது மைல்ட் கேஸ்களை மட்டுமே ஏற்படுத்துவதால் பலி எண்ணிக்கை குறையும், ஆபத்தான டெல்டா பரவலும் தடைபடும் என்று கூறியுள்ளனர்.

    வேக்சின்

    வேக்சின்

    அதேபோல் தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஓமிக்ரான் பரவியவர்களில் 40 சதவிகிதத்திற்கும் மேலானோர் வேக்சின் போடாதவர்கள் அல்லது ஒரு டோஸ் போட்டவர்கள். அவர்கள் பாதித்த பின்பும் கூட பெரிதாக கஷ்டப்படவில்லை. லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்துள்ளது. இதனால் ஓமிக்ரான் கொரோனாவிடம் இருந்து 2 டோஸ் வேக்சின் போட்டவர்கள் தப்பிக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    English summary
    Coronavirus: B.1.1529 Omicron mutant may over take Delta and decrease death rate around the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X