நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவனம் மக்களே... ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால்.. அவரிடமிருந்து 6 அடி தூரம் வரை பரவுமாம்!

தொற்று பாதித்தவரிடமிருந்து 6 அடி வரைக்கும் கொரோனா வைரஸ் தாக்குமாம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்களிடமிருந்து 6 அடி வரைக்கும் அந்த நோய்த்தொற்று பாயும் அபாயம் இருக்கிறதாம்.. அமெரிக்க நாட்டு, நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மிகப்பெரிய வல்லரசு நாடுகளே தொற்றை கண்டு பீதியடைந்து கலங்கி போய் உள்ளன.

இதுதான் அதிரடி.. அன்று, கவுண்டிங் மையத்திலிருந்து தள்ளி விடப்பட்ட அப்பாவு.. இன்று சட்டசபை சபாநாயகர் இதுதான் அதிரடி.. அன்று, கவுண்டிங் மையத்திலிருந்து தள்ளி விடப்பட்ட அப்பாவு.. இன்று சட்டசபை சபாநாயகர்

இந்த தொற்றுக்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.. அதற்கான ஆராய்ச்சியில் அறிஞர்கள் ஈடுபட்டு வந்தாலும், தொற்று குறித்த புது புது தகவல்கள் தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளன.

வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

அந்த வகையில், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமானது, தற்போது புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது... அதன்படி, காற்றின் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு இந்த வைரஸ் பரவுமாம்.. இதனை சுவாசிக்கும் மற்றவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுமாம்.

 பாதிப்பு

பாதிப்பு

இதற்கு முன்புவரை, கொரோனா நோயாளிகளுக்கு பக்கத்தில் இருந்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருளை தொட்டாலோ, நமக்கும் தொற்று பாதிக்கும் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது.. ஆனால், இப்போது அப்படி இல்லை.. தொற்று பாதிப்புக்கு ஆளான நபர்களிடம் இருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் கூட காற்றின் மூலம் இந்த கொரோனா வைரஸ் பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த ஒருவரிடம் இருந்து 6 அடி வரை உள்ள தூரத்தில் அவரது நீர் துளிகளை இன்னொருவர் சுவாசிக்கும்போது உள்இழுக்க வாய்ப்பு உள்ளது...

 காற்றோட்டம்

காற்றோட்டம்

அப்படி இழுக்கும்போது வைரஸ் அவரை பாதிக்கும். இப்படி பரவுவதற்கு காரணம், நம்மை சுற்றி காற்றோட்டம் குறைந்து காணப்படுவது அல்லது அரங்குகளில் அதிக கூட்டத்துடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகள்தான் என்கிறார்கள்.. இதுபோன்ற இடங்களில் காற்றோட்டம் அவ்வளவாக இல்லாத காரணத்தால் வைரஸ் கிருமிகள் காற்றிலேயே நீண்ட நேரத்துக்கு நிலைத்திருக்குமாம்.. இதன்மூலம் காற்றில் ஒரு மீட்டர் தூரம் வரை கூட பயணிக்கவும் வாய்ப்புள்ளதாம்.

 இடைவெளி

இடைவெளி

அதனால்தான், காற்றோட்டம் இல்லாத வீடுகளில், நெருங்கிய சொந்தங்களாக இருந்தாலும்கூட, மாஸ்க் இல்லாமலும், போதுமான இடைவெளியில்லாமலும் பழக வேண்டாம் என்கிறார்கள்.. இத்தகைய வீடுகளுக்குள் இருப்பதை காட்டிலும், காற்றோட்டம் மிகுந்த வெளியிடங்களில் போதிய சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடித்தபடி இருக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

 மாணவர்கள்

மாணவர்கள்

இப்போதைக்கு, அமெரிக்க பள்ளிகளில் மாணவர்களின் பெஞ்சுகளுக்கு நடுவில் 3 அடி இடைவெளி மட்டுமே விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இப்போது, 6 அடி வரை கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்றும், காற்றோட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் ஆபத்து அதிகம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதால், அந்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் உரிய மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

English summary
Coronavirus infect even Six feet distance, US another CDC cdc guidelines
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X