கடந்த 2 வாரம்தான் மிக மோசம்.. தினமும் 1 லட்சம் கேஸ்கள்.. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த இரண்டு வாரமாக உலகம் முழுக்க தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தினமும் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.

உலகம் முழுக்க கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. சீனாவில் வுஹனில்தான் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி கொரோனா பரவியது. அதன்பின் உலகம் முழுக்க பரவியது.

இன்னும் இந்த வைரஸின் தோற்றம் குறித்தும் எங்கிருந்து முதலில் பரவியது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. உலகம் முழுக்க வளர்ந்த நாடுகளை கூட இந்த கொரோனா வைரஸ் முடக்கி போட்டு இருக்கிறது.

மே மாதம்

மே மாதம்

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக உலகம் முழுக்க தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. மே 30ம் தேதியில் இருந்து தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஜூன் 12ம் தேதி 1.42 லட்சம் பேருக்கு கொரோனா பரவியது. உலக சுகாதார மையம் கணித்ததை விட அதிக வேகத்தில் கொரோனா பரவ தொடங்கி உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

எத்தனை கேஸ்கள்

எத்தனை கேஸ்கள்

உலகம் முழுக்க 8,108,666 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க கொரோனா காரணமாக 438,596 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 4,196,701 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இன்னும் அமெரிக்கா, பிரேசிலில் கொரோனாவின் தீவிரம் குறையவில்லை.

அமெரிக்கா நிலை

அமெரிக்கா நிலை

அமெரிக்காவில் இதுவரை 2,182,949 கேஸ்கள் பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் 20721 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு பலி எண்ணிக்கை 118283 ஆக உயர்ந்துள்ளது. உலகில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. தினசரி அதிகம் வரும் கேஸ்களில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 891,556 கொரோனா கேஸ்கள் உள்ளது.

இந்தியா

இந்தியா

பிரேசிலில் நேற்று மட்டும் 23854 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 44,118 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 537,210 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 8246 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 343,026 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,243 பேருக்கு இந்தியாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 9,915 பேர் கொரோனா காரணமாக இதுவரை பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+