நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தயாராக இருங்கள்.. கொரோனாவை பெருந்தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம்.. மிக முக்கிய அறிக்கை!

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் COVID19 நோய் தாக்குதலை பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் நேற்று அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் COVID19 நோய் தாக்குதலை பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் நேற்று அறிவித்துள்ளது.

Recommended Video

    Corona Virus : இந்தியாவில் முதல் உயிரிழப்பு ?

    கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலக நாடுகள் திணற தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க 123 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.உலகம் முழுக்க 119,177 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,295 கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

    முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்! முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்!

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவும் வேகமும், அதன் தாக்கமும் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் COVID19 நோய் தாக்குதலை பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கிறோம், என்று கூறியுள்ளது.

    எப்படி

    எப்படி

    இதை ஆங்கிலத்தில் Pandemic என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், Pandemic என்ற வார்த்தை சாதாரணமாக பயன்படுத்த கூடிய வார்த்தை கிடையாது. இது மிகவும் முக்கியமானது. இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்தினால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். மக்கள் இடையே இதனால் தேவையற்ற பயம் ஏற்படும்.

    என்ன தீவிரம்

    என்ன தீவிரம்

    ஆனாலும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கிறோம். பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் கொரோன வைரசுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உலக சுகாதார மையம் இதற்காக தொடர்ந்து தீவிரமாக செயல்படும்.

    போர்க்கால முறை

    போர்க்கால முறை

    உலகம் முழுக்க இருக்கும் எல்லாம் நாடுகளும் உடனே அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு போர்க்கால முறையில் செயல்பட வேண்டும். நோய் தாக்குதல் உள்ளவர்களை தனிமைப்படுத்தி, உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் தாக்குதல் பரவ வாய்ப்புள்ள எல்லோரையும் தனிமைப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளை எல்லோரும் தயார்படுத்த வேண்டும்.

    மருத்துவ பணியாளர்கள்

    மருத்துவ பணியாளர்கள்

    உங்கள் நாட்டில் உள்ள மருத்துவ பணியாளர்களை இதற்காக பயிற்சி கொடுத்து தயார் படுத்துங்கள். நாம் எல்லோரும் இணைந்து பணியாற்ற இதுதான் சரியான நேரம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு நோய் தாக்குதலை உலக சுகாதார மையம் பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்காது. உலகம் முழுக்க பரவினால் மட்டுமே இப்படி அறிவிக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்ன இது

    என்ன இது

    pandemic அல்லது பெருந்தொற்றுநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோய் ஒரு நாடு முழுக்க அல்லது உலகம் முழுக்க பரவினால் அதை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை ஆகும். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க 120+ நாடுகளில் பரவியதை அடுத்து, அதை pandemic அல்லது பெருந்தொற்றுநோய் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஒரு நோயின் வீரியம், பரவும் தன்மை, வேகம், பரவிய இடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்படி அறிவிக்கப்படும் .

    ஏன் கொரோனா

    ஏன் கொரோனா

    பொதுவாக ஒரு வைரஸ் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிகள் மூலம் பரவினால் அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்க மாட்டார்கள். ஆனால் அதே நோய் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிகள் மூலம் பரவி, பின் அந்த நாட்டிற்கு உள்ளே இருக்கும் குடிமக்களிடமும் பரவினால் அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிப்பார்கள். உள்நாட்டிற்குள் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை இதில் கருத்தில் கொள்வார்கள்.

    எப்படி பரவும்

    எப்படி பரவும்

    பொதுவாக பெருந்தொற்றுநோய் என்று ஒரு நோய் அறிவிக்கப்பட்டால், அதை தீவிரமாக கண்காணிப்பார்கள். அதன் வேகம் அதிகரிக்கும் போதுதான் அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிப்பார்கள். தற்போது கொரோனா வேகம் அதிகரித்துள்ளது. முன்பை விட 17 மடங்கு வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. அதனால் கொரோனவை தற்போது பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் வரையறை செய்துள்ளது.

    English summary
    Coronavirus: WHO Declares the COVID -19 Outbreak a Global Pandemic yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X