அமெரிக்காவை உலுக்கிய ஒரு நாள்.. கடந்த 24 மணி நேரத்தில் 64 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 13,228,323 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
உலகம் முழுக்க தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு இப்போது குறைய வாய்ப்பு இல்லை. இது மிக மிக மோசமான வைரஸ் தாக்குதலாக உருவெடுக்க போகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா காரணமாக உலகம் முழுக்க 574,962 பேர் பலி அடைந்து உள்ளனர். இதுவரை 7,691,015 பேர் உலகம் முழுக்க கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா நிலை
அமெரிக்காதான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போது வரை 3,478,415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் அங்கு 64420 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 138234 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 1,549,072 பேர் அமெரிக்காவில் இதுவரை குணமடைந்து உள்ளனர். அதேபோல் அமெரிக்காவில் 1791109 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

பிரேசில் கணக்கு
பிரேசிலில் 1887959 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.நேற்று மட்டும் அங்கு 21783 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் 72921 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். பிரேசிலில் 1213521 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அதேபோல் பிரேசிலில் 60526 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

இந்தியா நிலைமை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது.இந்தியாவில் மொத்தமாக இதுவரை 907645 பேர் இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28179 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 23727 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 572112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல் இந்தியாவில் மொத்தமாக 311806 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள்.

கட்டுப்படுத்திய ரஷ்யா
ரஷ்யாவில் 733,699 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.நேற்று மட்டும் அங்கு 6537 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் 11439 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 504021 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அதேபோல் ரஷ்யாவில் 218239 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications