கடலில் குளித்தபோது விபரீதம்.. காதுக்குள் நுழைந்த குட்டி நண்டு.. படாதபாடுபட்டு வெளியில் எடுத்த பெண்!
பெண் ஒருவரின் காதில் இருந்து குட்டி நண்டை வெளியில் எடுக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நியூயார்க்: கடலில் நீச்சல் பழகிய பெண்ணின் காதுக்குள் புகுந்த குட்டி நண்டை வெளியில் எடுக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
காதுக்குள் எறும்பு புகுவது எல்லாம் நம்மூரில் சாதாரண விஷயம். ஆனால் அந்த எறும்பு காதுக்குள் அங்கும் இங்கும் ஓடி ஒரு வழி படுத்தி விடும் என்பது வேறுகதை. இதற்கென பல கை வைத்தியங்களும் இங்கு புழக்கத்தில் உள்ளது. சரி, எறும்பு என்றால் அசால்டாக வெளியில் எடுத்து விடலாம்.. காதில் புகுந்தது ஒரு நண்டு என்றால்.. கேட்கவே கொஞ்சம் பீதியாக இருக்கிறதா..?
கரீபியன் தீவுப் பகுதியில் நிஜமாகவே இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

குட்டி நண்டு
கரீபியன் தீவுகளில் ஒன்றான புரூட்டோ ரிகோ தீவில் இளம்பெண் ஒருவர் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது காதுக்குள் குட்டி நண்டு ஒன்று சென்று விட்டது. காதுக்குள் தீடிரென வலியோடு கூடிய குடைச்சல் எடுக்கவே, பயந்து போயுள்ளார் அப்பெண்.

குதித்து ஓடும் நண்டு
வலியில் துடித்த அப்பெண்ணின் காதில் எதோ சிக்கி இருப்பதை தெரிந்து கொண்ட, ஒருவர் இடுக்கி போன்ற கருவியால் அதனை வெளியில் எடுக்க முயற்சித்துள்ளார். அவரது இடுக்கிக்கு சிக்காமல், அந்த குட்டி நண்டு போக்கு காட்ட, கடைசியில் ஒரு வழியாக அதனைப் பிடித்து வெளியில் போட்டு விட்டார் அந்நபர். கீழே விழுந்ததும் அந்த குட்டி நண்டு குதித்துக் கொண்டு ஓடி விட்டது.
வீடியோ வைரல்
இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர, அது வைரலாகி விட்டது. பார்க்கும் போதே பீதியை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது இந்த வீடியோ. அந்நபர் காதுக்குள் இடுக்கியை விட்டு அந்த நண்டை பிடிக்க முயலும் காட்சிகள், திகில் பட அனுபவத்தைத் தருகிறது.

பரிதாப கமெண்ட்கள்
பாவம் அந்தப் பெண், காதுக்குள் புகுந்த நண்டின் குடைச்சலை எப்படி பொறுத்துக் கொண்டாரோ என இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இடுக்கியை காதுக்குள் விட்டு, அந்த நண்டை வெளியில் எடுக்கும் வரை அப்பெண் வலியை எப்படி சமாளித்தாரோ எனவும் கமெண்ட்டில் பரிதாபப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications