ரூ. 72 லட்சம் தந்து.. 8 மாதம் பயணித்து.. அமெரிக்கா போன இந்தியரை.. 9 நாளில் நாடு கடத்திய டிரம்ப்!
நியூயார்க்: அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களில் ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த ஆகாஷ் நாடு கடத்தப்பட்ட விவகாரம் கவனம் பெற்றுள்ளது. பல லட்சங்களை செலவு செய்து இவர் அமெரிக்கா சென்ற நிலையில் அங்கே அவர் 2 வாரம்கூட இல்லாத அவலம் கவனம் பெற்றுள்ளது.
சுமார் 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை விற்று இவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். ஒருவருக்கு கமிஷன் 65 லட்ச ரூபாய், பயண செலவு 7 லட்சம் ரூபாய் என்று மொத்தமாக 72 லட்ச ரூபாய் கொடுத்து இவர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

கார், படகு, விமான பயணம், நடைபயணம் என்று மொத்தமாக 8 மாசம் பயணம் செய்து அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் அவர் அமெரிக்கா சென்ற 9 நாளில் டிரம்ப் நடவடிக்கையால் திருப்பி அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் அத்துமீறி குடியேறிய இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இந்தியர்களை இந்தியாவை நோக்கி நாடு கடத்த தொடங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்காக "முதல் பேட்ச்" விமானம் இந்தியாவிற்கு வந்துள்ளது. இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம்.
யாரெல்லாம் அனுப்பப்படுகிறார்கள்:
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
நாடு கடத்தல்:
சட்டவிரோத இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் கடந்த வாரம் அதிகாலை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக அமெரிக்க ராணுவ விமானம், அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்ற தொடங்கி உள்ளது.
அதன்படி டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து 140+ இந்தியர்களை ஏற்றிக்கொண்டு C-17 விமானம் புறப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி இந்த விமானம் வந்த நிலையில் கடந்த வாரம் தரையிறங்கியது.
இந்த நாடுகடத்தலானது இறுதி கிடையாது.. திட்டமிடப்பட்ட பல நாடு கடத்தல் பிளான்களில் இதுவும் ஒன்று. வரும் நாட்களில் இன்னும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
செலவு எவ்வளவு:
இந்த ராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
ICE வகை விமானங்களை நாடு கடத்த பயன்படுத்தினால் மிகவும் மலிவு விலையில் அதாவது ஒரு நபருக்கு ரூ. 55,000 என்ற செலவில் நாடு கடத்த முடியும்.
ஆனால் சாதாரண விமானத்தில் நாடு கடத்தி அது விபத்துக்கு உள்ளானால்.. அது இரண்டு நாட்டு பிரச்சனையாக மாறும். வேறு நாட்டு குடிமகனை கொன்றதாக மாறிவிடும். இதை தடுக்கவே C-17 போர் விமானத்தை டிரம்ப் பயன்படுத்துகிறார்.
நாடு கடத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும், இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும். அமெரிக்க அரசின் துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications