அதிபர் தேர்தலில் வென்ற.. அடுத்த நொடி.. உலகப் போரை பற்றி டிரம்ப் சொன்ன பெரிய ஸ்டேட்மென்ட்.. கவனம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற நிலையில்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கியமாக உலகில் நடக்கும்.. நடக்க போகும் போர்களை பற்றி பேசி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜோ ரோகன் என்ற பிரபல யூ டியூபரின் சேனலில் அளித்த பேட்டியில், 3ம் உலகப்போருக்கு மிக நெருக்கமாக நாம் இருக்கிறோம். இன்று இருப்பதை விட 3-ம் உலகப் போருக்கு நாம் நெருக்கமாக இருந்ததில்லை. அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் சரியாக இல்லை. இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மோசம் அடைந்து உள்ளது.

நான் இருந்தால் இந்த போரை நிறுத்துவேன். ஒரே நாளில் போரை நிறுத்துவேன். கமலா ஹாரிஸின் தவறான முடிவுகள் காரணமாக நமது வெளியுறவுக்கொள்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அவரால் இந்த போரை எல்லாம் நிறுத்த முடியாது, என்று கூறி உள்ளார்.
அதோடு நான் அதிபராகும் முன்.. காசாவில் நடக்கும் போரை முடித்து விடுங்கள்.. அதுவரை காத்திருக்க வேண்டாம்.. கதை முடித்து விடுங்கள் என்று அமெரிக்கா அதிபர் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார்.
அதோடு நான் ஆபிஸுக்குள் வருவதற்கு முன் போரை முடித்து விடுங்கள். அதுவரை நீட்டிக்க வேண்டாம். எதற்கும் காத்திருக்க வேண்டாம். 3ம் உலகப்போருக்கு மிக நெருக்கமாக உலக நாடுகள் இருப்பதாக.. முக்கியமாக அமெரிக்கா இருப்பதாக அமெரிக்கா அதிபர் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இப்படிப்பட்ட நிலையில்தான் அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப்.,. நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்; நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன் என்று ஃபளோரிடாவில் ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றி உள்ளார்.
அதோடு நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.
நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றி அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம்.
நாம் இதுவரை வரலாற்றில் பார்க்காத மிகப்பெரிய நிகழ்வு இது. இது மிகப்பெரிய அரசியல் இயக்கமாக.. அலையாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இனியும் நடக்குமா என்பது சந்தேகம்.
அமெரிக்காவை புதிய உயரத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லும். நாட்டின் பிரச்சனைகளை சரி செய்வோம். வரலாறு படைத்து உள்ளோம். வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. மிகப்பெரிய தடைகளை நாம் தகர்த்து உள்ளோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
அதிபர் தேர்தல் வெற்றி: அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 267 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 214 வாக்குகளை வென்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அந்த வகையில் டிரம்ப் வென்று மீண்டும் அதிபராகிறார்.












Click it and Unblock the Notifications