எலான் மஸ்க்கை வீட்டுக்கு அனுப்பிய டிரம்ப்.. கையை விட்டுப்போன DOGE தலைவர் பதவி.. பின்னணி
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற உதவி செய்த உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு அமெரிக்காவின் செயல்திறன் துறையை உருவாக்கி அதன் தலைவர் பொறுப்பை வழங்கினார். இதில் செயல்பட்டு வந்த எலான் மஸ்க் தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ள நிலையில் டிரம்ப் பிரியா விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எலான் மஸ்க். உலகின் பெரும் பணக்காரரான இவர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ஏராளமான பணம் செலவழித்தார்.

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும் எலான் மஸ்க்கிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார் டிரம்ப். அமெரிக்காவின் செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக அவரை நியமித்தார்.
அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு, எலான் மஸ்க் கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி கொடுத்தார். தேர்தல் பிரசாரங்களுக்கு உதவி செய்தார். இந்த நன்றியை மறக்காத டொனால்ட் டிரம்ப், செயல்திறன் துறை என்று தனியே உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். இந்த செயல்திறன் துறையின் முக்கிய பணி என்பது அமெரிக்காவின் பொருளாதாரம், நிதி மேலாண்மையை மேற்கொள்வதாகும்.
அமெரிக்கா எங்கெல்லாம் தேவையில்லாமல் நிதி செலவு செய்கிறதோ, அதனை அறிந்து நடவடிக்கை எடுக்க டொனால்ட் டிரம்பிடம் பரிந்துரைப்பது தான். அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் USIAD மூலம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் பல ஆயிரம் கோடி நிதி நிறுத்தப்பட்டது. மேலும் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் எலான் மஸ்க் தான். அவரது பரிந்துரையில் தான் டொனால்ட் டிரம்ப் அந்த நிதியை நிறுத்தி வைத்தார். அதோடு பல பணியாளர்களை வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினார் எலான் மஸ்க்.
டிரம்ப் - எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையால் அமெரிக்கர்கள் கதிகலங்கினர். இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவின் செயல்திறன் துறையின் தலைவர் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகி உள்ளார். இந்த பொறுப்பில் உள்ளதால் அவரது தொழிலில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அவரது நிறுவனங்கள் சரிவை சந்திக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக அவரது நிறுவன பங்குகளின் மதிப்பு சரிந்தது.
இதனால் தொழிலில் கவனம் செலுத்த DOGE பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் எலான் மஸ்க். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் ஏற்கனவே வழங்கிவிட்டார். இதையடுத்து எலான் மஸ்க்கிற்கு பிரியா விடை (Farewell) வழங்கி டொனால்ட் டிரம்ப் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதில் துணை அதிபர் ஜேடி வான்ஸ், அமைச்சர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். அதன்பிறகு ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது எலான் மஸ்க், ‛‛DOGE என்பது இன்னும் முடியில்லை. நான் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் நண்பராகவும், அட்வைசராகவும் செயல்படுவேன்'' என்றார்.
டொனால்ட் டிரம்ப் கூறும்போது, ‛‛மஸ்க் சிறந்த மனிதர். அவரது செயல்பாடு நன்றாக இருந்தது'' என்று கூறினார். துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறுகையில்,‛‛DOGE தொடர்ந்து செயல்படும். மஸ்க் சிறப்பாக செயல்பட்டார்'' என்று புகழ்ந்தார்.
-
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
இனி தினம் ரூ.576 கோடி செலவு செய்தால் கூட.. எலான் மஸ்க்கால் சொத்தை தீர்க்கவே முடியாது! சுவாரசிய கதை -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
SpaceX: நினைச்சதொன்னு, நடந்ததொன்னு.. எலான் மஸ்க்-கிற்கே ஆனந்த கண்ணீர் வரவைத்த சம்பவம்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications