படிச்சு படிச்சு சொன்னாங்களே.. அண்டார்டிகாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட கொசு.. அழிவின் அறிகுறி?
நியூயார்க்: உலகளாவிய வெப்பநிலை உயர்வால், இதுவரை கொசுக்கள் இல்லாத நாடாக இருந்த ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே அண்டார்டிகாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் கொசுக்கள் இல்லாத நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்றாக இருந்தது.
காலநிலை மாற்றம் காரணமாகவே இப்படி கொசுக்கள் அங்கே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி என்று ஐநா எச்சரித்து உள்ளது. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

காலநிலை மாற்றம்
ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
சதுப்பு நிலங்கள், குளங்கள் போன்ற கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற வாழ்விடங்கள் ஐஸ்லாந்தில் ஏராளமாக இருப்பதால், அங்கு கொசுக்கள் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் நீண்டகாலமாகவே கணித்து வந்தனர். இருப்பினும், பல கொசு இனங்கள் அங்குள்ள கடுமையான காலநிலையைத் தாங்க முடியாமல் போகலாம்.
ஐஸ்லாந்தில் கொசுக்கள்
உலக அளவில் ஆர்க்டிக் பகுதி, மற்ற பகுதிகளை விட நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஐஸ்லாந்தில் சாதனை அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது. பனிப்பாறைகள் உருகி வருகின்றன; மேலும், சூடான, தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள் ஐஸ்லாந்து நீர்நிலைகளில் காணப்படுகின்றன.
புவி வெப்பமயமாதலால், உலகெங்கிலும் பல்வேறு வகையான கொசு இனங்கள் புதிதாகக் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பிரிட்டனில், எகிப்திய கொசுவின் (Aedes aegypti) முட்டைகள் கண்டறியப்பட்டன. அத்துடன், ஆசியன் டைகர் கொசு (Aedes albopictus) கென்ட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் போன்ற வெப்பமண்டல நோய்களைப் பரப்பக்கூடிய இவை, அச்சுறுத்தும் ஆக்கிரமிப்பு இனங்களாகக் கருதப்படுகின்றன.
கொசு இனங்கள் - ஐஸ்லாந்து நான்கு மடங்கு வெப்பம்
வடஅரைக்கோளத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும், ஐஸ்லாந்து நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது. Culiseta annulata இனத்தைச் சேர்ந்த மூன்று கொசுக்கள், கிடாஃபெல், கியோஸ் ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்டன. பியோர்ன் ஹியால்டாசன் என்பவர் மூலம் இந்த கொசுக்கள் அங்கே கண்டறியப்பட்டன. இவற்றில் இரண்டு பெண் கொசுக்களும், ஒரு ஆண் கொசுவும் அடங்கும். இந்த இனம் குளிரைத் தாங்கக்கூடியது. மேலும், பனி காலங்களில் அடித்தளங்கள் மற்றும் பூமிக்கு அடியில் தங்குவதன் மூலம் ஐஸ்லாந்தின் தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் திறன் கொண்டது.
பியோர்ன் ஹியால்டாசன் என்பவர் இந்த கொசுக்களைக் கண்டறிந்து, 'இன்செக்ட்ஸ் இன் ஐஸ்லாந்து' என்ற ஃபேஸ்புக் குழுவில் அதைப் பற்றிய தகவலைப் பகிர்ந்தார். அக்டோபர் 16 அன்று மாலை நேரத்தில், ஒரு சிவப்பு ஒயின் ரிப்பனில் விசித்திரமான ஈ ஒன்றைப் பார்த்தேன் அதன்பின்தான் தெரிந்தது நான் பார்த்தது கொசுக்கள் என்று. அது ஒரு பெண் கொசு என்று பியோர்ன் ஹியால்டாசன் கூறி உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications