டிரம்ப் வேஸ்ட் என விமர்சித்த மம்தானி! நியூயார்க் மேயர் தேர்தலில் வெல்வாரா? வாக்குப்பதிவு தொடங்கியது
நியூயார்க்: நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி களமிறங்கியுள்ளார். இவர் அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இந்த தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது தொடங்கியிருப்பதால், இவர் வெற்றிப்பெறுவரா? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
நியூயார்க் நகர தேர்தல் தேதி நவம்பர் 4 தான். ஆனால் அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை இருக்கிறது. எனவே இன்று முதல் வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன.

முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை என்றால் என்ன?
இந்தியாவில் இருப்பதை போல தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அந்த நாளில் மட்டுமே வாக்களிக்க முடியும் என்கிற நடைமுறை அமெரிக்காவில் கிடையாது. வேலைக்கு செல்பவர்கள், விடுப்பு கிடைக்காதவர்கள், மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் இவர்களால் குறிப்பிட்ட தேதியில் வாக்களிக்க முடியாது. மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட நாளில் வாக்களிக்க வேண்டும் எனில், கூட்ட நெரிசல் ஏற்படும். எனவே இதையெல்லாம் தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அந்நாட்டில் பின்பற்றப்படுகிறது.
அதன்படி பொது தேர்தல் தேதிக்கு 9 நாட்களுக்கு முன்பு இருந்து மக்கள் வாக்களிக்க தொடங்கலாம். இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். தபால் வாக்குப்பதிவும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையும் வெவ்வேறானவை. அந்த வகையில் இன்று தேர்தல் தொடங்கியிருக்கிறது.
யார் யார் போட்டியாளர்கள்?
இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இதில் போட்டியிடுகிறார். நியூயார்க் மேயராக ஜனநாயக கட்சியை சேர்ந்த எரிக் ஆடம்ஸ் இருந்தார். அவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். எனவேதான் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. கீழ்கண்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
- ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் - ஜோஹ்ரான் மம்தானி
- குடியரசுக் கட்சியின் வேட்பாளர் - கர்டிஸ் ஸ்லிவா
- சுயேச்சை வேட்பாளர் - ஆண்ட்ரூ கூமோ
முன்கூட்டியே வாக்குப்பதிவு இன்று தொடங்கி, நவ.2ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏன் இந்த தேர்தல் முக்கியம்?
இந்த தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றிருக்கிறது. ஏனெனில் நியூயார்க் நகரம் அமெரிக்காவின் மிக முக்கியமான நகரமாகும். இந்த நகரில் நடக்கும் அரசியல் மாற்றம், நாடு முழுவதும் எதிரொலிக்கும். அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் இடமாகவும் நியூயார்க் இருக்கிறது. எனவே இந்த தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. மட்டுமல்லாது, இந்த தேர்தலில் டிரம்ப்பையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சிக்கும் ஜோஹ்ரான் மம்தானி களத்தில் இருக்கிறார்.
மம்தானியின் வாக்குறுதிகள்
இவரது வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. "நான் மேயரானால், நியூயார்க் நகரத்தில் வீடுகளின் வாடகை உயர்வை கட்டுப்படுத்துவேன். அதாவது இனி வாடகை உயர்வு இருக்காது. பொது போக்குவரத்து இலவசமாக்கப்படும். மலிவு விலையில் புதிய வீடுகளை கட்டுவேன். செல்வந்தர்கள் மீது அதிக வரியை போட்டு, அதில் வரும் நிதியை சமூக மேம்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்துவேன். குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,400 என இருக்கிறது. இது நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இது ரூ.2,600 ஆக உயர்த்தப்படும்" என்று கூறியிருக்கிறார். இந்த வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் மம்தானிக்கே அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால் டிரம்ப், மம்தானியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அமெரிக்காவின் ஆட்சியாளர்களை பொருத்தவரை கம்யூனிஸ்ட் என்றால் பயங்கரவாதம் என்று அர்த்ம். எனவே மம்தானி ஒரு கம்யூனிஸ்ட் என்று டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
இப்படியான விமர்சனங்களுக்கு மத்தியில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. இதில் மம்தானி வெற்றிப்பெறுவாரா? என்று எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications