Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிற்போக்குத்தனமான ஆட்சி.. பெண்கள், குழந்தைகளின் கல்வி முக்கியம் - ஆப்கனுக்கு யுனெஸ்கோ வலியுறுத்தல்

பெண்கள் கல்விபெறும் உரிமையை ஆப்கன் அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று ஐநாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பெண்களின் கல்வியைச் சீரழித்துவிடாதீர்கள் என ஐநாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ ஆப்கான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் கல்விபெறும் உரிமையை தலிபான்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்கள் அங்கு இடைக்கால ஆட்சியை நிறுவும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இடைக்கால அரசின் பிரதமராக அகுந்தஸாவும் இரு துணைப் பிரதமர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

Education of women and children is important UNESCO insistence on Taliban

அதில் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு வழங்காதது சர்வதேச அளவில் விவாதத்திற்கு உள்ளானது.

கடந்த 1995-2001ஆம் ஆண்டு ஆட்சியைப் போல் இல்லாமல் பெண்கள், சிறுமிகளுக்குக் கல்வி உரிமை வழங்கப்படும். பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென பெண்கள் வேலைக்குச் செல்லத் தடையும், பெண்கள் விளையாட்டுக்குத் தடை விதித்தும் தலிபான்கள் உத்தரவிட்டனர்.

20 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்ற போது, சிறு பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது. இளம்பெண்கள் உயர்கல்வி பயிலக் கூடாது. ஆண் துணையில்லாமல் கடைத்தெருவுக்குக் கூட செல்லக் கூடாது. மிக முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவே கூடாது என்று தாலிபான்கள் உத்தரவிட்டனர்.

கடந்த 2002ஆம் ஆண்டு ஆப்கன் மீது அமெரிக்கா போர் தொடுத்து, ஜனநாயக ரீதியிலான புதிய அரசு அமைந்தபின் அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமைகள் வழங்கப்பட்டன. பெண்கள் கல்வியின் அவசியம் குறித்து அறிந்து படிப்பதற்காக கல்வி நிலையங்களுக்கு வந்தனர். ஆணாதிக்கம் தொடர்பான விழிப்புணர்வு அவர்களுக்கு வந்தது. அரசில் பல உயர் பதவிகளை அலங்கரித்தனர்.

எல்லாமே நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் அமெரிக்க ராணுவம் சொந்த நாட்டுக்கு திரும்ப போவதாக தெரிவித்து படிப்படியாக நாட்டை விட்டு கிளம்பியது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தினர் தலிபான்கள். ஆப்கானில் வசிக்கும் பெண்களின் நிலைதான் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

ஆப்கனில் முழுமையான அரசைக் கூட நிறுவுவதற்குள் பெண்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் தாலிபான்கள் . மிக முக்கியமாக இரு பாலரும் இணைந்து படிப்பதற்குத் தடை விதித்துள்ளனர். பெண்களுக்குப் ஆண் ஆசிரியர்கள் பாடம் எடுக்கக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றனர்.

தாலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷிமி ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைச்சர்களாக முடியாது என்றும் பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது அவர்களால் தாங்கமுடியாத சுமை என்றும் கூறியுள்ளார்.

பெண்களும் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை என்றும் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் சையது ஷக்ருல்லா ஹஷிமி கூறியுள்ளார். மேலும், தற்போது ஆப்கனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை நாட்டின் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனக் கூறியிருக்கிறார்.

Recommended Video

    America-வுக்கு எதிராக Taliban-ஐ வைத்து Pakistan போடும் திட்டம்

    தலிபான்கள் ஆட்சியில் பெண்ணுரிமை முற்றிலும் மறுக்கப்படுவதாக கூறி உலக நாடுகள் விமர்சித்து வரும் நிலையில் தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா, பெண்கள் குழந்தை பெற மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளார்.

    இச்சூழ்நிலையில்தான் பெண்களின் கல்வியைச் சீரழித்துவிடாதீர்கள் என ஐநாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ நிறுவனம் தலிபான்களிடம் கெஞ்சாத குறையாக கோரிக்கை வைத்துள்ளது.

    யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயக ஆட்சி அமைந்த பிறகு பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது. கல்வியுறிவு சதவீதமும் உயரத் தொடங்கியது. தலிபான்கள் ஆட்சியில் தொடக்கக் கல்வியில் சிறுமிகள் ஒருவர் கூட இல்லை. ஆனால், 2018ஆம் ஆண்டில் 25 லட்சம் பேர் கல்வி பயின்றனர்.

    தலிபான் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது பெண்களின் கல்வியறிவு சதவீதம் இரட்டிப்பாகியுள்ளது. ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுமிகளின் கல்விக்குப் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், தலிபான் ஆட்சிக்கு வந்தபின் அந்த உதவிகள் நிறுத்தப்பட்டன. இதெல்லாம் ஒரு தலைமுறைக்கே பேரழிவை ஏற்படுத்தும். அந்த நிலைக்கு தலிபான்கள் இட்டுச் செல்லக் கூடாது. பெண்கள் கல்விபெறும் உரிமையை தலிபான்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    மாணவ, மாணவிகள் இணைந்து படிக்க தலிபான்கள் தடை விதித்திருப்பதால், பெண்களின் உயர்கல்வியில் எதிர்மறையான விளைவுதான் ஏற்படும். பெண்களின் வாழ்க்கை, பணிச்சூழல், உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஷரியத் சட்டப்படி பெண்கள், சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனத் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் எதிர்காலத்தில் ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுமிகள் கல்வி பாதிக்கும் அபாயம் இருப்பதால் இப்போதுள்ள வளர்ச்சியைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+