அம்மா மரணத்திற்காக போன ஊழியர்.. திரும்பி வந்தவருக்கு ஷாக் தந்த சுந்தர் பிச்சை.. சர்ச்சையில் கூகுள்!
இது போன்று ஓராயிரம் நிறுவனங்களில் எனக்கு பணி கிடைக்கலாம். ஆனால் எனக்கு தாய் ஒருவர்தான் இருக்கிறார் என டாமி யோர்க் கூறியுள்ளார்.
நியூயார்க்: தாய் இறந்த நிலையில் இறுதி சடங்கு முடித்து பணிக்கு திரும்பிய கூகுள் நிறுவன ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 2023ம் ஆண்டு பொல்லாத ஆண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் 2022ம் ஆண்டு இறுதியிலிருந்து பல முன்னணி சாஃப்ட் வேர் நிறுவனங்கள் பணிநீக்கத்தை தொடங்கியது. டிவிட்டர் பற்ற வைத்த இந்த நெருப்பு மைக்ரோசாஃப்ட், பேஸ்புக், அமேசான், கூகுள் என தற்போது ஐபிஎம் வரை பற்றி எரிந்துள்ளது. இந்த வெப்பத்தில் சுமார் 2 லட்சம் பேரின் வேலைகள் சாம்பலாகியுள்ளன.
கூகுள் நிறுவனத்தில் மட்டும் சமீபத்தில் சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த கடிதத்தை நெட்டிசன்கள் பரவலாக பகிர்ந்திருந்தார். அதில், "கடினமாக உழைத்த மற்றும் நம்ப முடியாத திறமை வாய்ந்த சிலரிடம் விடைபெறுவது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.

கடிதம்
இந்த மாற்றங்கள் கூகுள் செய்பவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற உண்மை என்னை மிகவும் பாதிக்கிறது. இந்த முடிவுகளுக்கு நான் முழு பொறுப்பேற்றுக்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி என்பது வியப்பளிக்கக்கூடியதாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கான உந்து சக்தியாக நீங்கள் இருந்தீர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் நாம் யதார்த்தத்தில் பயணிக்க வேண்டும். இந்த இழப்பு மூலம் நாங்கள் அதற்கு ஏற்ப பல புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். தற்போது எங்களுக்கு முன்னாள் ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது. இந்த சவாலை நாங்கள் AI தொழில்நுட்பத்துடன் எதிர்கொள்ள இருக்கிறோம். எனவே நாங்கள் சாவால்களை நல்ல முறையில் எதிர்கொண்டு மேலும் முன்னோக்கி செல்வோம்" என்று கூறியிருந்தார்.

கூகுள்
இந்த பணி நீக்கத்தில் வேலையை இந்த 12 ஆயிரம் பேரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அந்த வகையில் தன்னுடைய பணிநீக்கம் குறித்து 'டாமி யோர்க்' எனும் கூகுள் என்ஜினியர் LinkedIn-ல் தன்னுடைய சோகத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த பகிர்வு தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியுள்ளதாவது, "நான் கடந்த 2021ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இது ஒரு திருபு முனையாக இருந்தது. ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கை அதுபோல இல்லை. நான் பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே எனது தாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

புற்றுநோய்
அவருக்கு நான்காம் கட்ட கணைய புற்று நோய் பாதிப்பு இருந்தது. எனவே என்னால் பணியில் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை. அடிக்கடி தாயை பார்த்துக்கொள்ள விடுப்பு எடுக்க வேண்டியதாய் இருந்தது. இருப்பினும் என்னுடைய முழு திறனையும் நான் பணியில் காட்டினேன். ஆனால் நாளுக்கு நாள் தாயின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இறுதியாக ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் சிகிச்ச பலனின்றி உயிரிழந்துவிட்டார். எனவே அவரது இறுதி சடங்கை நடத்த நான்கு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தேன். பின்னர் 5வது நாள் பணிக்கு திரும்பியபோது எனது நிறுவனம் எனக்கு ஒரு செய்தியை வைத்திருந்தது.

பணி நீக்கம்
எனக்கான பணி நீக்கம் என்பதுதான் அந்த செய்தி. இது எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், நான் இது போன்று ஓராயிரம் நிறுவனங்களில் பணி செய்ய முடியும். ஆனால், தாய் என்பவள் ஒருவர்தானே? எனவே அவருடன் பொழுதுகளை கழிப்பதும், அவளது இறுதி சடங்கில் பங்கேற்பதும்தான் எனக்கு மன நிம்மதியை வழங்கும். இதற்கடுத்து ஒருநாள் நான் இந்த தடையை தாண்டிவிடுவேன்" என்று கூறியிருந்தார். டாமி யோர்க்கின் இந்த பதிவை பலரும் பகிர்ந்திருக்கின்றனர். அவருக்கு தங்களுடைய ஆறுதலையும் கூறியுள்ளனர்.

இந்தியர்கள்
தொடர் பணிநீக்கம் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் H-1B விசாவை கொண்டு அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். அதாவது அமெரிக்காவில் வேலை செய்யும் வரையில் இவர்களுக்கு அங்கு இருக்க உரிமை உண்டு. வேலை இல்லையெனில் 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். அப்படியும் வேலை கிடைக்கவில்லையெனில் இந்த விசாவை வைத்திருப்பவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். தற்போது அமெரிக்காவில் வேலையிழந்த நபர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியர் 30-40% வரை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications