ஐரோப்பா, உக்ரைன், கனடா, இந்தியா! ஒரு நட்பு நாட்டையும் விடாத டொனால்ட் டிரம்ப்! எதிர்பார்க்காத கொடூரம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பாரம்பரிய எதிரி நாடுகளுக்கு பதிலாக அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகளைத்தான் கடுமையாக தாக்கி வருகிறார். நட்பு நாடுகளுக்கு எதிராகவே டிரம்ப் அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு எதிராக டிரம்ப் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

donald trump vladimir putin ukraine russia war

ஆடிப்போன ஐரோப்பா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பா மீது 25% கூடுதல் வரிகளை விதிக்க உள்ளார். ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா - ஐரோப்பா இடையே உக்ரைன் விவகாரத்தில் மோதல் உள்ளது. அதோடு சமீபத்தில்தான் அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இப்போது ஐரோப்பாவிற்கு கூடுதல் வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரலாம்.

கதறும் கனடா

கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவிப்பதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் தீவிரமாக இருக்கிறாராம். அவர் இத்தனை நாட்கள் இந்த விவகாரத்தில் அவர் சீரியஸாக பேசவில்லை என்று கருத்துக்கள் வைக்கப்பட்ட நிலையில்.. அவர் உண்மையில் இதில் தீவிரமாக இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளையும், சீனா மீது 10% வரியையும் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதித்து உள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்கா இன்னும் கடுமையான வரி விதிப்புகளை மேற்கொண்டால்.. கண்டிப்பாக அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது. அப்படி இருக்க அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அவர்கள் வாங்க முடியாது . மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்.

சீனா, வெனின்சுலா போன்ற நாடுகளிடம் வேண்டுமானால் எரிபொருள் வாங்கிக்கொள்ளலாம். எங்கள் மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்று கனடா அறிவித்து உள்ளது. கனடா மீது 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடாவின் எரிபொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார். அதேபோல் மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். இதற்கு கனடா மற்றும் மெக்சிகோ.. அமெரிக்காவின் பொருட்களுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டு உள்ளது.

கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.

உடைந்து போன உக்ரைன்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். நேற்று வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.

இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கு இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.

இதற்கு பதிலடி தந்த டிரம்ப், அதிபர் டிரம்ப் - உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்
என்றார்.

இதற்கு கோபமாக பதில் சொன்ன ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி என்றுள்ளார்.

டிரம்ப் - அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.


இந்தியாவிற்கும் சிக்கல்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சீனாவின் பெயர் இடம்பெற்று உள்ளது. வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் இந்த வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்தார்.

சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதல் 3 இடங்களை வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தகப்பற்றாக்குறையில் இந்தியா 3.2 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் ஒன்பதாவது இடத்தில்தான் இந்தியா உள்ளது. இதனால் அமெரிக்கா கூடுதல் வரி விதித்த நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியா இல்லை. டிரம்ப் வரும் போதெல்லாம் டாலர் வலிமை அடைந்து உள்ளது. இதனால் இந்த முறையும் அப்படி நடந்தால்.. இந்தியாவிற்கு பொருளாதார சிக்கல் ஏற்படும். இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி போடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பதிலடி தரும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான டீம் முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்ளுவோம் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+