ஒரே ஆண்டில் வேறலெவலில் மாறிய சம்பளம்.. சுந்தர் பிச்சைக்கு 2022ல் கிடைத்தது எவ்வளவு?
நியூயார்க்: ஒரு பக்கம் சிக்கன நடவடிக்கை என ஊழியர்கள் பணி நீக்கம் செய்யும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், மறுபக்கம் சிஇஒ சுந்தர் பிச்சைக்கு பல கோடிகளில் சம்பளம் வழங்கி உள்ளது. சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாக ஊதியம் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, உலகில் அதிக ஊதியம் பெறும் ஐடி நிபுணர்களில் முக்கியமானவர் ஆவார். 50 வயதாகும் சுந்தர் பிச்சைக்கு 2022 ஆம் ஆண்டில், 226 மில்லியன் டாலர் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 1850 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் $218 மில்லியன் பங்கு சார்ந்த பரிசுகள் என்கின்றன ஆங்கில ஊடகங்கள்.

ஒரு பக்கம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிக்கன நடவடிக்கை களை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளிலிருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இன்னும் ஏராளமானோரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது.
மறுபக்கம் சிஇஒ சுந்தர் பிச்சைக்கு கடந்த 2020 -20222 வரையிலான ஆண்டுகளில் சம்பளம் 2 மில்லியன் டாலராக இருந்தது. அதாவது இந்திய மதிப்பில் 16 கோடிதான் வழங்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது 1850 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கி உள்ளார்கள் என்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் சுந்தர் பிச்சை, ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தில் செலவுகளை குறைக்கும் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கத்தை அறிவித்தார். அதாவது 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாகவும் அத்துடன் உயர் அதிகாரிகள் குறைக்கப்பட்ட போனஸைப் பெறுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.
12 ஆயிரம் பேர் என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவன பணியாளர்களில் 6 சதவீதம் ஆகும். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து இந்த மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் லண்டன் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்,
இந்நிலையில் தான் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு 2022-ல் ஒட்டுமொத்த ஊதியமாக 22.6 கோடி டாலர் வழங்கப்பட்டுள்ளது. இது, சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகம் என்று பங்குசந்தை ஆவணங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.
சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டில் வாரி வழங்கப்பட்டுள்ள பல கோடி டாலர் சம்பளம் அங்கு பணிபுரியும் சாதாரண பணியாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஊதிய முரண்பாட்டை காட்டுகிறது. ஒரு பக்கம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டும் ஆல்பபெட் நிறுவனம் மறுபக்கம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கடுமையான போட்டியை ஏற்படுத்த விரும்புகிறது. அதற்காக பேர்ட் சாட்பாட்டை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
பேர்ட் சாட்பாட் நடைமுறைக்கு வரும் போது, இன்னும் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழக்கவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே வந்த சாட் ஜிபிடி பலரது வேலைக்கு ஆப்பு வைக்கும் என்று ஐடி பணியாளர்களே கூறியிருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications