மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.. ஈரானின் சம்பவத்திற்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு
நியூயார்க்: ஈரான் அடுத்தடுத்து ஆறு ஏவுகணைகளை கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது வீசிய நிலையில், அதனை பாதுகாப்பு மண்டலம் மூலம் அமெரிக்கா நடுவானிலேயே தாக்கி அழித்தது. இந்நிலையில் எத்தனை ஏவுகணைகள் விமானப்படைதளம் மீது விழுந்தது என்று தெரியவில்லை. இந்நிலையில் ஈரானின் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட் எக்ஸ் பதிவினை பார்ப்போம்.
ஈரான் இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கு மேலாக சண்டை நடந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனினும் ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதால், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுத்துவிட்டது. இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது.

அமெரிக்காவின் பி-2 குண்டுவீச்சு விமானங்கள், 13,500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசின. இந்த குண்டுகள் பூமிக்கு அடியில் 200 மீட்டர் ஆழத்தில் உள்ளவற்றையும் அழித்துவிடும் வல்லமை உடையவை. ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் மலையை குடைந்து மிகவும் ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை அழிக்கவே 'பங்கர் பஸ்டர்' குண்டை அமெரிக்கா போட்டது. இந்த குண்டுவீச்சில் ஈரானின் மேற்படி அணுசக்தி தளங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தன. ஆனால் கதிர்வீச்சு அபாயம் எதுவும் ஏற்படவில்லை.
இதனிடையே தங்களுடைய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் கோபம் அடைந்த ஈரான், அமெரிக்க ராணுவ அத்துமீறல் மற்றும் இந்த முரட்டு ஆட்சியால் செய்யப்பட்ட குற்றங்களுக்கு எதிராக முழு பலத்துடன் எதிர்க்கவும், ஈரானின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு உரிமை உண்டு என்று ஆவேசமாக கூறியது.
இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க விமான படையின் தளமான அல்-உதெய்த் தளத்தை குறிவைத்து ஈரான் நேற்று இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது. கத்தார் தலைநகர தோஹாவிற்கு வெளியே பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அல்-உதெய்த் தள விமான தளம் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய தளமாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குதான் நேரடியாக ஈரான் தாக்கியது. மொத்தம் 6 ஏவுகணைகளை வீசிய நிலையில், அதனால் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில். "பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட கத்தார் நாடு செய்துள்ள அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலை பொறுத்தவரை எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதைத் தவிர, மிக முக்கியமாக, எந்த கத்தார் மக்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று பதிவிட்டுள்ளார்.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications