அமெரிக்காவில் ஷாக்கிங் திருப்பம்.. அதிபர் டிரம்ப்பை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர் மீதான புகார்கள் மீது செனட் சபையில் விசாரிக்கப்பட்டு, அந்த வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. எதிர்கட்சியான டெமாக்ரடிக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் அதிபர் டிரம்ப் சதி திட்டம் தீட்டுகிறார். உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசி இருக்கிறார் என்று கூறி உள்ளனர்.

இந்த புகார்தான், மொத்த விசாரணைக்கும் காரணம் ஆகும். இது மட்டுமின்றி இன்னும் சில புகார்களும் இந்த விசாரணைக்கு காரணம் ஆகும்.

ரஷ்யா எப்படி

ரஷ்யா எப்படி

டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார். டிரம்ப் சட்டங்களை வளைத்து, தனக்கு வேண்டியதை செய்கிறார், என்று ஒரு பக்கம் புகார் வைக்கப்படுகிறது. ரஷ்யாதான் டிரம்பிற்காக தேர்தலின் போது நிறைய முறைகேடுகளை செய்தது என்று கூறப்படுகிறது

மேலும் சில புகார்

மேலும் சில புகார்

அதேபோல் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை ஊதிய விதிகளை டிரம்ப் மீறுகிறார். வெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி டிரம்ப் நடந்து கொள்கிறார். வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறி, போர் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். என்று நிறைய புகார்கள் வைக்கப்படுகிறது.

என்ன தீர்மானம்

என்ன தீர்மானம்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை இரண்டிலும் வெற்றி பெற்றால், டிரம்ப் தனது பதவியை இழக்க நேரிடும். அமெரிக்காவில் அதிபரை தகுதி நீக்கம் செய்யப்படும் முறைதான் அமெரிக்காவில் impeachment (இம்பீச்மெண்ட்) என்று அழைக்கப்படுகிறது.

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. அந்த விசாரணை முடிந்து இன்று அதிகாலை அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் அதிபர் ட்ரம்பை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது.

எத்தனை வாக்கு

எத்தனை வாக்கு

அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது.
ஜனநாயக கட்சிக்கு அங்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களே இருக்கிறார்கள். இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 179 பேர் வாக்களித்தனர்.

மூன்றாவது அதிபர்

மூன்றாவது அதிபர்

அமெரிக்காவில் இதுவரை இரண்டு அதிபர்கள் அவர்களின் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பில் கிளிண்டன் , ஆண்ட்ரு ஜான்சன் ஆகியோர் 1998 மாட்ரிம் 1868ல் பிரதிநிதிகள் சபை மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் செனட் சபையால் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இதே போல் ஒரு பதவி நீக்க நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்கொண்டுள்ளார்.

செனட் சபை

செனட் சபை

இந்த நிலையில் அவர் மீதான புகார்கள் மீது செனட் சபையில் விசாரிக்கப்பட்டு, அந்த வாக்கெடுப்பு நடத்தப்படும். அங்கும் வாக்கெடுப்பில் இவர் தோல்வி அடைந்தால் டிரம்ப் பதவியை மொத்தமாக இழக்க நேரிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+