போவியா.. ஃபேஸ்புக் பக்கம் போவியா.. கன்னத்தில் பளார்னு அறைய.. வேலைக்கு ஆள் வைத்த பிசினஸ்மேன்
தன்னை அறைவதற்காகவே வாடகைக்கு பெண்ணை நியமித்துள்ளார் ஒரு தொழிலபதிர்
நியூயார்க்: ஃபேஸ்புக்கை பார்க்கும்போதெல்லாம் கன்னத்தில் பளார் என்று தன்னை அறைவதற்காகவே ஒருவரை சம்பளத்திற்கு வேலைக்கு வைத்துள்ளார் மனீஷ் சேத்தி.. யார் இவர்? என்ன காரணம்?
இந்திய வம்சாவளி அமெரிக்க நபர்தான் மனீஷ் சேத்தி.. அமெரிக்காவில் தற்போது வசித்து வருகிறார்.. இவர் ஒரு தொழிலதிபர்.. பாவ்லோக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
2012-ல் இந்த நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.. ஆனால் எதிர்பார்த்த லாபம் வரவில்லை போலும்.. இந்த நிறுவனத்தில் சிறந்து விளங்கவும், தன்னுடைய தொழிலை முன்னுக்கு கொண்டு வரவும், நிறைய லாபம் சம்பாதிக்கவும் ஒரு புது ஐடியாவை கையில் எடுத்துள்ளார்.

சறுக்கல்
அதாவது, இவர் நிறைய நேரம் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கிவிடுகிறாராம்.. இப்படி எந்நேரேமும் ஃபேஸ்புக்கே கதி என்று கிடப்பதால்தான் தன்னுடைய பிசினஸ் சறுக்கி வருவதாக நினைத்தார்.. அதனால், இனிமேல் தேவையில்லாமல் ஃபேஸ்புக் பார்க்க கூடாது என்று முடிவு செய்தார்.. ஆனாலும் அவரால் ஃபேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லை.. அதனால், கிரெய்க்லிஸ்ட் என்ற கம்பெனியில் இருந்து ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி உள்ளார்.. அவரது பெயர் காரா.

ஃபேஸ்புக்
இவரது வேலை என்னவென்றால், எப்பவுமே சேத்தி பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ள வேண்டுமாம்.. சேத்தி எப்போவெல்லாம் ஃபேஸ்புக் பக்கம் போகிறாரோ, அப்போதெல்லாம் காரா, சேத்தி கன்னத்தில் பளார்னு ஒரு அறை விடணும்.. இதுதான் அவரது பணி.. இதற்கு காராவுக்கு தரப்பட்ட சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர்கள்.. இந்த சம்பவம் 2012-ல் நடந்துள்ளது..

உற்பத்தி
இப்போது காரா வந்த நேரம், சேத்தி கம்பெனி ஆஹா ஓஹோவென வளர்ந்துவிட்டதாம்.. உற்பத்தியும் பெருகி விட்டதாம்.. அதாவது காரா வந்தபிறகு, அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் 98 சதவீதம் அதிகரித்துவிட்டதாம்.. காராவை வேலைக்கு அமர்த்தியது முதல், கம்பெனி வளர்ச்சி பெற்றது வரை சோஷியல் மீடியாவில் அத்தனை செய்திகளும் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன. இதை பார்த்து சேத்திக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. உடனே அது சம்பந்தமாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.

ட்வீட்
இதனிடையே, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்கின்யும், அந்த ட்வீட்டுக்கு "தீ" (fire) சின்னம் போட்டுள்ளார்.. இதையடுத்து, நாமளும் இப்படி காரா மாதிரி ஒருவரை வேலைக்கு வைத்து கொண்டால்தான் சரிவரும் என்று பதிவிட, பலரும் அதை லைக் செய்து வருகிறார்கள். என்னைக்கோ நடந்த சம்பவம் இன்று வைரலாகி வருவது பலரால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications