அமெரிக்காவில் கொடூரம்! இந்திய வம்சாவளி தந்தை மகள் சுட்டுக்கொலை..சிக்கிய ஆப்பிரிக்க நபர்
நியூயார்க்: அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை - மகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏர்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற இரண்டு மணி நேரத்தில் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வர்ஜினியா மாகாணத்தில் உள்ள அகோமக் கவுண்டியில் லாங்க்போர்ட் நெடுஞ்சாலையில் பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இந்த பல்பொருள் அங்காடியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதீபாய் படேல் (வயது 56) மற்றும் அவரது 26 வயது மகள் உர்மி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் வழக்கம் போல கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பல்பொருள் அங்காடியை திறக்க வந்துள்ளனர்.

இந்திய வம்சாளி தந்தை - மகள் சுட்டுக்கொலை
அப்போது அங்கு கடையின் முன்பாக காத்திருந்த நபர் ஒருவர், இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மது வாங்குவதற்காக வந்ததாகவும் இரவு முழுக்க கடை முன்பு காத்திருந்தேன். ஆனால் நீங்கள் கடையை இப்போதுதான் திறக்கிறீர்கள் எனக் கூறி வாக்குவாதம் செய்தார். அப்போது திடீரென, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டார். துப்பாக்கிச்சூட்டில் நிகழ்விடத்திலேயே படேல் பலியாகினார்.
அவரது மகள் உர்மி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், உர்மியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் உர்மியும் உயிரிழந்தார். இந்த கொடூர காரியத்தை செய்த ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நபரான ஜார்ஜ்ஸ் பிரேசியர் டெவன் வார்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக பிரதீபாய் மற்றும் அவரது மனைவி ஹன்ஸ்பென் அமெரிக்காவிற்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ளனர். பிரதீப்பின் ஒரு மகள் கனடாவில் வசித்து வருகிறார். மற்றொரு மகள் குஜராத்தில் பணியாற்றி வருகிறார்.
பிரதீப்குமார் படேல், உர்மி ஆகிய இருவரும் குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டம், கனோடா எனும் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர்கள் என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். மது கிடைக்காததால் கோபத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 2-பேர் அமெரிக்காவில் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications