எதிர்காலமே போயிடுச்சு.. என்ன ஆகுமோ தெரியல.. கடும் அச்சத்தில் இந்தியர்கள்.. காரணம் டிரம்ப்தான்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக கடும் அச்சத்தில் இருப்பதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர். சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் மற்றும் யூகோவ் மூலம் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய-அமெரிக்கன் சர்வே இந்திய-அமெரிக்க அரசியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்த சர்வே ஆய்வு முடிவில் இந்தியர்கள் அச்சத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், சர்வே முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பிடனின் அமெரிக்க-இந்தியா உறவுகளை இந்திய அமெரிக்கர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்? டொனால்ட் டிரம்ப் வந்த பின் இது எப்படி மாறி உள்ளது? 2024 தேர்தலுக்குப் பிந்தைய இந்திய - அமெரிக்க உறவை எப்படி மதிப்பிடுகிறார்கள்? டிரம்ப் உங்களை வெளியேற்றுவார் என்று நினைக்கிறீர்களா? அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்கப்பட்டது.
1,206 இந்திய-அமெரிக்கர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பலரும் எங்கள் எதிர்காலம் சூனியம் ஆகிவிட்டது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை. டிரம்ப் காரணமாக அச்சத்தில் உள்ளோம் என்று கூறி உள்ளனர். பெரும்பாலானோர் அச்சத்தில் உள்ளதாக கூறி உள்ளனர். கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டும் இதை வரவேற்கும் வகையில் பேசி உள்ளனர்.

அமெரிக்க விசா
அமெரிக்காவில் H1-B visa மூலம் தங்கி இருக்கும் இந்தியர்களின் வாரிசுகள் பலர் விசா பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அமெரிக்காவிற்கு H1-B visa பெற்று குடியேறிய பலரின் குழந்தைகள் 21 வயதை கடந்த பின் விசா பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் இத்தனை காலம் பெற்றோர்களின் dependents ஆக இருந்தனர். அதாவது சார்பு விசாவில் இருந்தனர்.
தற்போது உள்ள அமெரிக்க விசா விதிப்படி.. 21 வயதாகும் நிலையில் அந்த வாரிசு 2 வருடங்களுக்குள் விசா பெற வேண்டும். ஆனால் அங்கே கொண்டுவரப்பட்ட சில விதிகள் மற்றும் வழக்குகள் காரணமாக இந்த 2 வருட கால அவகாசம் நீக்கப்படலாம் என்கிறார்கள்.
அதாவது 2 வருடத்தில் விசா பெற வேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது 21 வயதான உடன் இவர்கள் விசா பெற வேண்டும். இல்லையென்றால் இவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது சுயமாக இவர்கள் வெளியேற வேண்டிய அபாயம் உள்ளது.
தற்போது உள்ள டேட்டாபடி 1.34 கோடி இந்திய குழந்தைகள் விசா பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்கள் 21 வயதை அடையும் நிலையில் உள்ளனர். இதனால் 21 வயதான உடன் இவர்கள் விசா பெற வேண்டும். இல்லையென்றால் இவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா விசா நிராகரிப்பு முடிவு
ஏற்கனவே அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிபரான அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். இது கோர்ட்டால் தடுக்கப்பட்டு உள்ளது என்றாலும் விரைவில் அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால்.. 540 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும்.
அதுவரை தானாகவே அந்த விசா செயல்பட தொடங்கி விடும். எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதை 180 நாட்களாக டிரம்ப் குறைத்துள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால் இனிமேல் 180 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும் என்று டிரம்ப் புதிய விதி கொண்டு வந்துள்ளார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications