இஸ்ரேல் கனவு பலிக்கவில்லையே.. அமெரிக்கா சரமாரியாக தாக்கிய பின்பும் கூட.. ஈரான் செய்த ஸ்மார்ட் மூவ்
டெஹ்ரான்: ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
ஈரான் மீது குண்டுபோட வைத்து அமெரிக்காவை போருக்குள் இழுத்துவிட இஸ்ரேல் முயன்றது.. அதாவது ஈரானை அமெரிக்காவை விட்டு தாக்க வைத்தால் ஈரான் அமெரிக்காவை பதிலுக்கு தாக்கும். இதற்கு அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பதிலடி கொடுக்கும்.
அப்படி நடந்தால் ஈரான் எளிதாக வீழ்ச்சி அடையும். இஸ்ரேல் அதிகம் போரில் ஈடுபடாமல், அமெரிக்காவை தனது கைக்கூலியாக பயன்படுத்தி ஈரானை வீழ்த்த முடியும். அமெரிக்காவின் படைகளை வைத்தே இஸ்ரேல் ஈரானை வீழ்த்த முடியும் என்று கனவு கண்டது.
ஈரான் ஸ்மார்ட் யுக்தி
ஆனால் ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்மார்ட்டாக செயல்பட்டு.. அமெரிக்க தளங்கள் எதையும் தாக்காமல், இஸ்ரேல் படைகளை மட்டுமே தாக்கி வருகிறது.
ஈரானிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை புதிய தாக்குதல்களைத் தொடங்கியது. ஹைஃபா மற்றும் டெல் அவிவ் மீது ஈரான் இரண்டு கட்டங்களாக 27 ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தையும் குறிவைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஈரானிய ஏவுகணை ஏவுதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கின்றன" என்று குறிப்பிட்டது. அமெரிக்கப் படைகள் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று ஈரானிய அணு நிலையங்களைத் தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரானின் இந்த தாக்குதல் வந்துள்ளது.
இதனால் இஸ்ரேல் திட்டமிட்டபடி.. ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஈரான் - இஸ்ரேல் போரில் அமெரிக்காவின் தலையீடு
அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகப்போராக உருவெடுக்கும். அமெரிக்கா தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். இது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவிலும், போர்ச் சூழலிலும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்பகுதியில் சுமார் 40,000 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். டிரம்ப் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 16 அடி பாய்வோம் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி நிரூபிக்கும் விதமாக.. அமெரிக்காவின் தளவாடங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க ராணுவ தளவாடங்களை தாக்குவதற்காக.. குறைந்த மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உலகப் போராக தீவிரமடையக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈரானின் முக்கியமான உள்கட்டமைப்பான ஃபோர்டோ அணு ஆலையை அமெரிக்கா தாக்கினால், ஈரான் மற்றும் அதன் பிராந்திய நட்பு விரைவான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கக்கூடும்.. நாம் தாக்கினால் அவர்கள் உடனடியாக அமெரிக்க தளவாடங்களை தாக்குவார்கள்.. இதனால் நிலைமை கைமீறும் என்று எச்சரித்துள்ளனர். இப்போது அமெரிக்கா தாக்கிவிட்டதால் அடுத்த கட்டமாக ஈரான் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.
-
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications