உங்களால் அணு ஆயுதத்தை எப்போதும் பெற முடியாது.. ஈரானுக்கு டிரம்ப் சவால்.. வலுக்கும் சண்டை!
ஈரான் எப்போதும் அணு ஆயுதத்தை பெறவோ, உருவாக்கவோ முடியாது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: ஈரான் எப்போதும் அணு ஆயுதத்தை பெறவோ, உருவாக்கவோ முடியாது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.
ஈரான் அமெரிக்கா இடையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பதற்றம் எப்போது வேண்டுமானாலும் மூன்றாவது உலகப்போரில் முடியும் என்றும் கூறுகிறார்கள். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது.
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம்
2015ல் ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்து கொண்டது. முன்னாள் அதிபர் ஒபாமாவின் தீவிர முயற்சியால் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இதை அதிபர் டிரம்ப் வந்த பின், சில மாதங்களில் நீக்கினார். ஈரான் இந்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்று கூறி அவர் ஒப்பந்தத்தை நீக்கினார்.

அடுத்த என்ன
அதன்பின்தான் அவர் ஈரான் மீது பொருளாதாரத்தடைகள் விதித்தார். கடந்த வருடம் மட்டுமே ஈரான் மீது அதிபர் டிரம்ப் மூன்று பொருளாதார தடைகளை விதித்தார். தற்போது ஈரான் மீது தாக்குதலும் நடத்த தொடங்கிவிட்டார்.

தாக்குதல்
இந்த நிலையில் நேற்று ஈரான் அரசு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில். ஈரான் 2015 ஒப்பந்தத்தை மதிக்காது. நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்குவோம். அணு ஆயுத சோதனைகளை நடத்துவோம். அமெரிக்கா எங்களை தடுக்க முடியாது என்று குறிப்பிட்டது.

ஈரான் முடியாது
அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார். அதில், ஈரான் எப்போதும் அணு ஆயுதத்தை பெற முடியாது, என்று கோபமாக குறிப்பிட்டார். ஆனால் ஈரான் தங்கள் அண்டை நாடுகளிடம் இருந்து அணு ஆயுதத்தை பெற முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்!












Click it and Unblock the Notifications