ஈரானுக்கு பயந்துபோன டிரம்ப்? மிரட்டுவது போல் மிரட்டிவிட்டு அமெரிக்கா செய்யும் வேலையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைகளை கொண்டு மாறி மாறி தாக்கி வருகின்றன. ஈரான் போர் தொடங்கி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை தாக்கி வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி சரணடைய வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஈரானுக்கு ஒரு புறம் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மறுபுறம் ஈரான் தாக்குதலுக்கு பயந்து மத்திய கிழக்கில் போர் விமானங்கள், போர் கப்பல்களை பாதுகாப்பான இடத்துக்கு அமெரிக்கா நகர்த்தி வருவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேலும், ஈரானும் நீண்டகாலமாக பகையாளிகளாக உள்ளன. தற்போது இருநாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலுக்கு முக்கிய காரணம் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பது தான். இதனை தடுக்க இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

israel-iran-conflict-us-relocates-military-aircraft-and-naval-vessels-from-bases-in-the-middle-ea

அன்று தொடங்கிய இந்த மோதல் இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானின் ராணுவ தளம், அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டும் மையங்களில் இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தற்போது ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இருநாடுகளும் மாறிமாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிடவில்லை. ஆனால் ஈரானை எதிர்த்து வருவதோடு, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. அணுயுதம் தயாரிக்க அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகிறார்.

இதுதொடர்பாக டிரம்ப், ‛‛ஈரான் தனது மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சொந்த மக்களை பலி கொடுக்கிறார். அவர் சரணடைய வேண்டும். ஈரான் எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பும் இல்லாமல் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. வரும் நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்த வாரம் பெரிய விஷயம் நடக்கலாம். இதில் ஒரு வாரம் என்பது அதிகமாக கூட இருக்கலாம். அதற்கு முன்பு கூட ஏதாவது நடக்கலாம்'' என கூறியுள்ளார்.

ஆனால் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனி ஈரான் சரணடையாது. தொடர்ந்து போரை சமாளிக்கும். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தால் அந்த நாட்டின் பாதுகாப்பு படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இது நிலைமை மோசமாகும் என்று கூறியுள்ளார். இதனால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

இந்நிலையில் தான் தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் ஒருபக்கம் ஈரானை மிரட்டி வந்தாலும் கூட மறுபுறம் ஈரான் தங்களை குறிவைத்து தாக்கி விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் விமான தளம், கடற்படை தளங்களில் இருந்து விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்பட பல முக்கிய ஆயுதங்கள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அதேபோல் அமெரிக்கா ஈரானை எதிர்த்து வருகிறது. தற்போதும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை கடுமையாக கண்டித்து வருவதோடு மிரட்டியும் வருகிறார். இதனால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க - ஈரான் இடையே தாக்குதல் நடக்கலாம்.

இது சாத்தியமானால் ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் படை தளங்களை குறிவைத்து தாக்கலாம். இதனால் முன்னெச்சரிக்கையாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அதன்படி பக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தில் இருந்து போர்க்கப்பல்கள் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல் கத்தாரில் உள்ள அலத் உதித் விமான தளத்தில் இருந்தும் போர் விமானங்கள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது வழக்கமான ஒரு நடவடிக்கை கிடையாது. அமெரிக்க படை வீரர்கள் மற்றும் போர்க்கப்பல், போர்விமானங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+