அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
நியூயார்க்: மோடி அரசு பல சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், இந்தியாவில் நம்பமுடியாத உள்கட்டமைப்பு உள்ளது எனவும் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பாராட்டி தள்ளியிருக்கிறார்.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு குறித்து அமெரிக்க வங்கி ஒன்று பாசிட்டிவாக கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக ஜே.பி. மோர்கன் செயல்பட்டு வருகிறது. இது வணிக வங்கி, சொத்து மேலாண்மை மற்றும் நிதி பரிவர்த்தனை செயலாக்கம் உள்ளிட்ட பல்வேறு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க்கின் எகனாமிக் கிளப் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் பங்கேற்றிருந்த ஜே.பி.மோர்கனின் சிஇஓ டிமோன், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி நம்ப முடியாத வேலையை செய்ததாக பாராட்டியுள்ளார்.
"மோடி இந்தியாவில் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளார். அவர் 40 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளார். மட்டுமல்லாது இந்தியாவில் மிகச் சிறப்பான உட்கட்டமைப்பும், கல்வி முறையும் இருக்கிறது. இந்த விவகாரங்களில் பிரதமர் மோடி உறுதியாகவும், கடுமையாகவும் இருக்கிறார். அமெரிக்காவுக்கும் இந்த பாணி கொஞ்சம் தேவைப்படுகிறது. இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கிறது. அவர்களின் வரி முறை மிகவும் சிக்கலானது. ஐரோப்பாவை போன்றது.
இதில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த வாய்ப்புகளை பிரதமர் மோடி உடைத்தெறிகிறார். இந்த பாணி அமெரிக்காவுக்கும் கொஞ்சம் தேவைப்படுகிறது. இந்தியாவில் சுமார் 70 கோடி மக்களுக்கு புதியதாக வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அடையாளம் இருக்கிறது. அவர்களின் கைரேகைகள், கருவிழி அடையாளம் இருக்கிறது. இங்கு வலுவான வேலை வாய்ப்பு கட்டமைப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் சர்வதேச அளவில் மிக முக்கியமான வங்கியாக இருக்கும் ஜே.பி.மோர்கனின் சிஇஒ பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications