ரித்திக் ரோஷனை ரசித்த மனைவி.. கத்தியை எடுத்து குத்திக் கொன்ற கணவர்.. தானும் தற்கொலை
மனைவியை கொன்று, தற்கொலை செய்து கொண்டார் அமெரிக்க இளைஞர் ஒருவர்
Recommended Video
நியூயார்க்: "எனக்கு பிடிக்காது பார்க்காதேன்னு சொன்னேன். கேட்கவே இல்லை. அதான் குத்திட்டேன்.." இப்படி எழுதி வைத்து விட்டு, தனது மனைவியையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த இந்தியர் ஒருவர்.
33 வயதான அந்த இந்தியரின் பெயர் தினேஷ்வர் புத்திதாட். இவரது மனைவி டோன் டோஜோய், 27 வயது. நியூயார்க்கின் க்யீன்ஸ் பகுதியில் வசித்து வந்தனர். டோன், ஒரு பாரில் வேலை பார்த்து வந்தார். ரித்திக் ரோஷன் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் தினேஷ்வருக்கு ரித்திக் ரோஷனை சுத்தமாக பிடிக்காதாம்.
கணவரை அடிக்கடி ரித்திக் ரோஷன் பாட்டு பாடி டீஸ் செய்வது டோனின் வேலை. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் கூட ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ரோஷன் என்றாலே கடுமே அலர்ஜியாகி விட்டது தினேஷ்வருக்கு!

ஹிர்த்திக் ரோஷன்
இந்த நிலையில் சம்பவத்தன்று டிவி பார்த்துக் கொண்டிருந்தனர் கணவரும் மனைவியும். அப்போது வழக்கம் போல ரித்திக் ரோஷன் பாட்டை வைத்துள்ளார் மனைவி. சானலை மாற்றுமாறு கூறியுள்ளார் கணவர். இதுதொடர்பாக வாக்குவாதம் மூண்டது. அப்போது ஆத்திரமடைந்த கணவர், கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்றார்.

அதிர்ச்சி
இதை எதிர்பாராத டோன் அப்படியே சுருண்டு விழுந்து இறந்து போனார். இதைத் தொடர்ந்து தூக்குப் போட்டு தினேஷ்வரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நியூயார்க்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெசேஜ்
தற்கொலைக்கு முன்பு தனது சகோதரிக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார் தினேஷ்வர். அதில் தனது மனைவி தனது பேச்சைக் கேளாமல் பாடல் கேட்டதால் சுட்டுக் கொன்று விட்டதாகவும் தானும் தற்கொலை செய்யப் போவதாகவும், வீட்டுச் சாவியை பூத்தொட்டிக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் அதில் கூறியிருந்தார் தினேஷ்வர். கடந்த ஜூலை மாதம்தான் இவர்களுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் போல.

மனைவி
இதில் சில முறை அவர் மனைவியை அடித்துள்ளார். இதையடுத்து கோர்ட்டுக்குப் போன டோன், தன்னை அடிக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்கி வைத்திருந்தார். மனைவி மீது பாசத்துடன் தான் இருந்துள்ளார் தினேஷ்வர். ஆனால் ரோஷன் மேட்டர் உள்ளிட்டவை சேர்ந்து மனைவி மீது ஆத்திரமாக மாற்றி விட்டது என்று அவர்களது நண்பர்கள் கூறுகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications