"முகமது அலி ஒரு மனிதரே கிடையாது..! அவருடன் நான் மோதினால்.." மைக் டைசன் சொல்றதை பாருங்க!
நியூயார்க்: குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி ஒரு மனிதரே கிடையாது எனக் கூறியுள்ள பிரபல குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், அவருடன் தான் சண்டையிட நேர்ந்தால் என்ன நடக்கும் என சுவாரசியமாக தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டை என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது முகமது அலி என்ற பெயர் தான். 1960 முதல் 1982-ம் ஆண்டு வரை சுமார் 22 ஆண்டுகளாக குத்துச்சண்டை உலகை ஆட்சி செய்தவர் முகமது அலி.
முகமது அலிக்கு முன்னரும் பின்னரும் நூற்றுக்கணக்கான குத்துச்சண்டை வீரர்கள் வந்துவிட்டாலும் இன்னும் அவர் அடைந்த புகழை வேறு ஒருவரால் இன்னும் எட்ட முடியவில்லை என்பதே உண்மை.

ஜாம்பவான்களையே மண்டியிடச் செய்தவர்
முகமது அலி களத்தில் இருந்த காலக்கட்டத்தில் தான், ஜார்ஜ் ஃபோர்மேன், ஜோ ஃபிரேசியர், சன்னி லிஸ்டன், ஜெர்ரி குவாரி போன்ற பல தலைசிறந்த அபாயகரமான பாக்ஸர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் ஒருவரால் கூட முகமது அலியை வீழ்த்த முடியவில்லை. ஜோ பிரேஸியர் மட்டும் ஒரு முறை முகமது அலியை தோற்கடித்தார். அதற்கு பின்னர் நடந்த இரண்டு போட்டிகளில் ஜோ பிரேஸியரை மண்ணை கவ்வ செய்தார் முகமது அலி. பிற்காலத்தில் அவருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் வந்த பிறகுதான், 4 போட்டிகளில் அவர் தோல்வி அடைந்தார்.

தி கிரேட்டஸ்ட்...
குத்துச்சண்டை வீரர்களிலேயே முகமது அலிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. மின்னல் வேகத்தில் குத்துவது, இந்த ரவுண்டில் எதிரியை வீழ்த்துவேன் எனக் கூறி அதே ரவுண்டில் அவர்களை சாய்ப்பது, எதிராளிகள் எவ்வளவு பெரிய பலசாலிகளாக இருந்தாலும் அவர்கள் குத்துகளை எளிதாக தாங்குவது, குத்துகளில் இருந்து தப்பிக்கும் லாவகம் என இயற்கையாக அமையப்பெற்ற பல திறமைகள் முகமது அலிக்கு உண்டு. அதேபோல, குத்துச்சண்டை வரலாற்றிலேயே நாக் அவுட் ஆகாத ஒரே வீரர் முகமது அலிதான். இதுபோன்ற காரணங்களால்தான் அவர் 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (Greatest of All Time) என அழைக்கப்படுகிறார்.

அலியின் ஆதர்சன சீடர் டைசன்..
முகமது அலியின் சண்டைகளை பார்த்து குத்துச்சண்டைக்கு வந்தவர்கள் இன்று வரை ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். பெரும் ஜாம்பவன்களாக அறியப்படும் லெனாக்ஸ் லீவைஸ், எவான்டர் ஹோலிஃபீல்ட், லேரி ஹோம்ஸ், டியோன்டே வைல்டர் என பலரும் முகமது அலியால் ஈர்க்கப்பட்டு குத்துச்சண்டைக்கு வந்தவர்களே. அவர்களில் மிக முக்கியமானவர் மைக் டைசன். தெருக்களில் சண்டையிட்டு கொண்டிருந்த பையனாக இருந்த அவருக்கு, முகமது அலியை பார்த்தே ஒரு தொழில்முறை பாக்ஸராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. முகமது அலியை போல வர வேண்டும் என்பதற்காகவே குத்துச்சண்டை பயின்று பிறகு மிகப்பெரிய சாம்பியனாக மாறியவர் மைக் டைசன்.

முகமது அலியின் குடும்ப நண்பர்..
உலக ஹெவிவெயிட் சாம்பியனாக மாறிய பிறகு, மேடையிலேயே இதனை பல முறை கூறியிருக்கிறார் மைக் டைசன். பிறகு முகமது அலியின் குடும்ப நண்பரானார் மைக் டைசன். அனைவரிடமும் அடிக்கடி கோப்பபடுவதையும், அடிக்க பாய்வதையும் வழக்கமாக கொண்டிருந்த மைக் டைசன், முகமது அலிக்கு முன் சென்றால் ஒரு பூனையை போல பவ்யமாக மாறிவிடுவார். மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவரான முகமது அலி, மைக் டைசனை அடிக்கடி கிண்டல் செய்து விளையாடுவார். அவரை அடிப்பது போல பாவனை செய்வார். ஆனால் ஒருநாளும் அவரிடம் டைசன் கோப்பட்டதோ, முகத்தை சுளித்ததோ கிடையாது. இவ்வாறு தனது ஆதர்சன நாயகனாக முகமது அலியை பார்த்து வந்தார் மைக் டைசன். இதன் காரணமாகவே, முகமது அலி இறந்த போது அவரது உடலை தூக்கிச் செல்லும் வாய்ப்பு மைக் டைசனுக்கு வழங்கப்பட்டது.

முகமது அலி வெர்சஸ் டைசன்...
மைக் டைசன், முகமது அலி உறவு இவ்வாறு இருக்க, அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி இப்போது வரை மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது. குத்துச்சண்டைக்குள் இப்போது நுழைந்த கத்துக்குட்டி வீரர் முதல் தொழில்முறை குத்துச்சண்டை வீரர்கள் வரை இந்தக் கேள்வியை கேட்காத ஆளே இல்லை. இதுதொடர்பாக பல நேர்காணல்களில் மைக் டைசனிடம் தொகுப்பாளர்கள் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் முகமது அலிதான் நிச்சயம் வெல்வார் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அவர் எப்படி வெல்வார்; அதற்கான காரணங்களை அவர் கூறியது கிடையாது.

வானொலி நிகழ்ச்சியில் பேட்டி..
இந்நிலையில், குத்துச்சண்டையில் இருந்து மைக் டைசன் ஓய்வுபெற்று விட்டதால் அடிக்கடி தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் மைக் டைசன் கலந்துகொண்டு வருகிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த வாரம் ஒரு வானொலி நிகழ்ச்சியில் மைக் டைசன் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், "நீங்கள் 20 வயதிலும், முகமது அலி 20 வயதிலும் இருக்கும்போது உங்கள் இருவருக்கும் இடையே பாக்ஸிக் போட்டி நடந்திருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்?" எனக் கேட்டார்.

"முகமது அலி ஒரு மனிதரே கிடையாது.."
அதற்கு பதிலளித்து மைக் டைசன் கூறியதாவது: நான் குத்துச்சண்டை சாம்பியனாக ஆனதில் இருந்து எங்கு சென்றாலும் இந்தக் கேள்விதான் என்னை சுற்றி சுற்றி வருகிறது. நானும் எத்தனையோ முறை முகமது அலிதான் ஜெயிப்பார் எனக் கூறிவிட்டேன். ஆனாலும் இந்த கேள்வியை யாரும் விடுவதாக இல்லை. சரி.. இப்போது நான் தெளிவாக கூறுகிறேன்.
நீங்கள் எல்லோரும் நினைப்பது போல முகமது அலி கிடையாது. அதாவது, அவரது வசீகரிக்கும் முகத்தை பார்த்து பலர் ஏமாந்து விடுகின்றனர். ஆனால் அவருக்கு இருக்கும் மூர்க்கத்தனத்திற்கு முகமது அலியின் முகம் மிக கோரமாக இருந்திருக்க வேண்டும். ஒரு டைனோசரின் முகம் தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும். எனக்கு குத்துச்சண்டை பிடிக்கும். ஆனால் இதற்காக நான் சாக துணிய மாட்டேன். ஆனால் முகமது அலி ஒவ்வொரு முறை ரிங்கில் ஏறும்போதும் சாகும் முடிவிலேயே வருவார். இல்லையென்றால், ஜார்ஜ் ஃபோர்மேன், ஃபிரேஸியரை அவர் ஜெயித்திருக்க முடியாது. இன்னும் சொல்ல வேண்டுமானால், முகமது அலி மனிதரே கிடையாது. அவர் ஒரு பயங்கர மிருகம். முகமது அலியுடன் நான் சண்டையிட்டால் அவர் என்னை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்று கொன்றுவிடுவார். நல்லவேளை அவரது காலக்கட்டத்தில் நான் இல்லை. அவரை நான் ஜெயிப்பது என்பது முடியாத காரியம்.. ஒரு துளி கூட வாய்ப்பே இல்லை. இவ்வாறு மைக் டைசன் கூறினார்.
மைக் டைசனின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications