நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழங்கால இந்திய பொக்கிஷங்களை மீட்டு வந்த பிரதமர்.. 157 தொல்பொருட்களுடன் நாடு திரும்பிய மோடி

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான 157 தொல்பொருட்களை தன்னுடன் கொண்டு வந்தார்.

கலை மற்றும் பாரம்பரியத்தில் இந்தியா மிகவும் தொன்மையான நாடு. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான பொருட்கள் இந்தியாவில் உள்ளது. இதில் பல பொருட்கள் சுதந்திரத்திற்கு முன் வெளிநாடுகளுக்கு பிரிட்டிஷார் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அதேபோல் சுதந்திரத்திற்கு பின் பல நூறு கலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது.

'பயங்கரம்..' 4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள்.. காரணத்தை கேட்டால் ஷாக்'பயங்கரம்..' 4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள்.. காரணத்தை கேட்டால் ஷாக்

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக பல சிலைகள், கலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு திருடிச் செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்த கலைப்பொருட்களை மீட்பதற்கான கடினமான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இன்னும் இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் வெளிநாட்டில் உள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த நிலையில்தான் பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றார். ஐநா மாநாடு, அதிபர் பிடனுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிசுடன் சந்திப்பு, குவாட் மாநாடு என்று முக்கிய கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்திய அமெரிக்க உறவு குறித்தும், வரலாற்று ரீதியாக இரண்டு நாட்டு கலாச்சாரம் குறித்தும், இரண்டு நாட்டின் ஜனநாயகம் குறித்தும் இந்த கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது.

மீட்டார்

மீட்டார்

இன்று இந்தியா திரும்பிய பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான 157 தொல்பொருட்களை தன்னுடன் கொண்டு வந்தார். சட்ட விரோதமாக கடத்தப்பட்ட, வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட, அமெரிக்காவால் விமான நிலையங்களில், போர்டுகளில் மீட்கப்பட்ட தொல்பொருட்களை மீட்டு பிரதமர் மோடி இந்தியா கொண்டு வருகிறார்.

Recommended Video

    Central Vista Project Construction- ஐ இரவில் திடீரென சென்று பார்வையிட்ட PM Modi
    என்னென்னெ கலை பொருட்கள்

    என்னென்னெ கலை பொருட்கள்

    12ம் நூற்றாண்டை சேர்ந்த வெண்கலத்தால் செய்த நடராஜர் சிலை, மண்ணால் செய்யப்பட்ட 10ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த சிலை, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தை சேர்ந்த 45 கலை பொருட்கள், இந்து மதத்திற்கு சொந்தமான 60, புத்த மதத்தை சேர்ந்த 16 கலை பொருட்கள், ஜெயின் மதத்தை சேர்ந்த 9 கலை பொருட்கள் பிரதமர் மோடி மூலம் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

     சிலைகள்

    சிலைகள்

    லஷ்மி நாராயண சிலைகள், புத்தா, விஷ்ணு, சிவன் பார்வதி, 24 ஜெயின் தீர்த்த கர்த்தா சிலைகள், வெண்கலத்தில் செய்யப்பட்ட சிலைகள், பெண் உடல் அமைப்புகள், பல்வேறு சிலையின் பாகங்கள், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த 8.5 செமீ நீளமுள்ள ரேவாந்தா சிலை உள்ளிட்ட இந்தியாவிற்கு சொந்தமான 157 தொல்பொருட்களை தன்னுடன் கொண்டு வந்தார்.

    English summary
    PM Modi brings back 157 artifacts US handed over to India today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X