போப் பிரான்சிஸ் மரணம்.. துல்லியமாக கணித்த நாஸ்ட்ராடாமஸ்.. கூடவே விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. ஷாக்
நியூயார்க்: உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில், போப் என்று அழைக்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஈஸ்டர் அதிகாலை காலமானார். அவருக்கு வயது 88. அவரின் மரணம் குறித்து நாஸ்ட்ராடாமஸ் முன்கூட்டியே துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது.
உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்த வல்லுனர்களில், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.
விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.

2025ல் என்ன நடக்கும் ?
தற்போது நடந்து வரும் 2025ல் என்ன நடக்கும் என்ற கணிப்புகளை இவரின் புத்தகத்தில் இருந்து வெளியிட்டு உள்ளனர். நாஸ்ட்ராடாமஸின் ஒரு பத்தியில் "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" என்று கூறுகிறது. அவர் மூன்றாம் சார்லஸ் அரசரைக் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள். சார்லஸ் மன்னரைப் பற்றி ஒரு பத்தியில், "விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் நடக்கும். அது முடிந்த பின் ஒரு புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்ட காலம் பூமியை பாதுகாப்பார் என்றுள்ளார்.
"கொடூரமான போர்களால்" சூழப்பட்டு "எதிரிகளை விட மோசமான துரோகங்களால்" சில நாடுகள் வீழ்த்தப்படும் என்று எச்சரித்து உள்ளார். "பழங்கால பிளேக்" வெடிப்பை உலகம் எதிர்கொள்ளும். இங்கிலாந்துக்கு புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருக்காது.. அதற்கு காரணமாக இந்த பிளேக் அமைந்துவிடும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். ஏற்கனவே அவரது COVID-19 தொற்றுநோய் கணிப்பு உண்மையாகிவிட்டதால்.. இந்த முறையும் வேறு ஒரு பெருந்தொற்று பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
மரணம் கணிப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில், போப் என்று அழைக்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஈஸ்டர் அதிகாலை காலமானார். அவருக்கு வயது 88. அவரின் மரணம் குறித்து நாஸ்ட்ராடாமஸ் முன்கூட்டியே துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. போப் பிரான்சிஸ், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவர் ஆவார். நாஸ்டர்டாமஸ் எழுதிய 'லெஸ் ப்ரோபடீஸ்' என்ற புத்தகத்தில் இது தொடர்பான கணிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் போப் பிரான்சிஸின் மரணம் பற்றிய தீர்க்கதரிசனம் இருந்ததாக கூறப்படுகிறது. . நாஸ்ட்ராடாமஸ் தனது புத்தகத்தில் ஒரு பத்தியில், "போப் ஆண்டவர் முதிய வயதில் மரணம் எய்துவார் (பிரான்சிஸ் காலத்தை குறிப்பிட்டு கணிப்பு).. அந்த மிகவும் வயதான போப்பாண்டவரின் மரணத்தின் மூலம் ... நல்ல இளம் வயதுடைய இன்னொரு ரோமன் நாட்டை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்படுவார். புதிய போப் தேர்வு செய்யப்பட்ட பின் அவர் பற்றிய நிறைய கேள்விகள் எழும். அவர் வலிமையானவரா என்றெல்லாம் கேள்விகள் எழும். ஆனால் அவர் நீண்ட காலம் போப்பாக இருப்பார். அவர் மக்களை பல இன்னல்களில் மேய்ப்பார்.
ஆனால் அந்த புதிய போப் போன பின்.. அவரின் அதிகாரம் முடிந்ததும், ஏழு மலைகள் நகரம் அழிக்கப்படும்.. எல்லாம் முடிவிற்கு வரும் என்று நாஸ்டர்டாமஸ் தனது கணிப்பில் எச்சரிக்கையுடன் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications