நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பக்கத்துல வருதே! பூமியை விடாமல் துரத்தும் சூரியன்.. இந்த ஆண்டின் மிக முக்கிய நாள் இது! ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஏறத்தாழ 15 கோடி கி.மீ தூரம் இருக்கிறது. ஆனால் ஆண்டுக்கு ஒரு நாள் இந்த சூரியன் பூமிக்கு மிக அருகில் வரும். அந்த நாள்தான் இன்று. அதாவது 2023ம் ஆண்டில் ஜனவரி 04ம் தேதிதான் இந்த வானியல் அற்புதம் நிகழ்கிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவை வானியல் அலகு(AU) என்று அழைப்பார்கள். இதனைக் கொண்டுதான் பூமியிலிருந்து மற்ற கோள்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதாவது வியாழன் கோள் பூமியிலிருந்து சுமார் 750 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது என்றும் சொல்லலாம், பூமியிலிருந்து 4.2 வானியல் அலகு தொலைவில் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

ஆக ஒரு வானியல் அளவு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவாகும். இன்று இந்த சூரியன் ஒரு வானியல் அலகுக்கும் குறைவான தொலைவில் (0.9833) பூமியை நெருங்கி வந்திருக்கிறது. இந்த நிகழ்வை 'பெரிஹேலியன்' என்று அழைப்பார்கள். இதனால் பூமிக்கு ஆபத்து இருக்கிறதா? என்று கேட்டால் கிடையாது என்றுதான் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். ஆபத்து மட்டுமல்ல பயனும் கூட ஏதும் இல்லை என்று அவர்கள் விளக்கியுள்ளனர்.

 சொல்லி அடிக்கும் நாசா... பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்! எங்கே விழும்? ஏன் முக்கியம் தெரியுமா சொல்லி அடிக்கும் நாசா... பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்! எங்கே விழும்? ஏன் முக்கியம் தெரியுமா

குளிர்காலம்

குளிர்காலம்

அதாவது இது குளிர்காலம். உலகம் முழுவதும் அநேக நாடுகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. சரி சூரியன்தான் இவ்வளவு பக்கத்தில் வருகிறதே குளிர் எல்லாம் போய்விடும் என்று பலர் யோசனை செய்திருந்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்ல ராஜா என்று விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். ஏனெனில் பூமி 23.44 டிகிரி சாய்ந்திருப்பதால் சூரியன் இவ்வளவு அருகில் இருந்தாலும் அதிலிருந்து வெளியாகும் கதிர்கள் நேரடியாக பூமியை தாக்காது. இதனால் பூமியின் வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. மட்டுமல்லாமல் தற்போது சூரியனுக்கு பூமி தன்னுடைய கடல் பரப்பை காட்டிக்கொண்டு இருக்கிறது. எனவே இந்த நீர் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்ளும். அதேபோல 6 மாதங்களுக்கு பின்னர் சூரியன் பூமியை விட்டு வெகு தொலைவில் இருக்கும்.

கோடை

கோடை

அதாவது இது ஜனவரி எனில், ஜூன் மாதத்தில் இந்த நிகழ்வு நடைபெறும். இதற்கு 'அபெலியன்' என்று பெயர். ஆனால் அப்போதுதான் பூமியில் அதிகமான சூடு இருக்கும். ஏன் அப்போது பூமி நேராக நிமிர்ந்து விடுகிறதா? என்று உங்களுக்கு கேட்க தோன்றும். அதுதான் கிடையாது. அப்போதும் பூமி 23.44 டிகிரி சாய்ந்துதான் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் பூமி தன்னுடைய மற்றொரு பாதியை சூரியனை நோக்கி காட்டிக்கொண்டிருக்கும். அந்த பாதியில் நிலப்பரப்பு அதிகமாக இருக்கும். எனவேதான் வெப்பம் அதிகமாக இருப்பதாக நாம் உணர்கிறோம்.

 நேராக பூமி

நேராக பூமி

ஒரு வேளை பூமி சாயாமல் நேராக இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? அப்படி இருந்தால் நம்மால் காலங்களை உணர முடியாது. அதாவது கார்காலம், குளிர்காலம், ​முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் ஆகியவற்றை நம்மால் உணர முடியாது. மேலும், சூரியனின் வெப்பம் நம்மை நேரடியாக தாக்கும் என்பதால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து இருக்கும். இதனால் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய பகுதிகள் பூமியில் இருக்காது. எனவே கடல் மட்டமும் கடுமையாக அதிகரிக்கும். இவ்வாறு அதிகரித்தால் சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முற்றிலுமாக கடலில் மூழ்கிவிடும்.

உயிர்கள்

உயிர்கள்

மட்டுமல்லாது 6 வகையான காலங்கள் இல்லையெனில் தாவரங்களின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். அதனுடைய இனப்பெருக்கம் மீக நீண்ட காலமாக இருக்கும். அல்லது மிக குறுகியதாக முடிந்துவிடும். அப்போது பூமியில் பதிவாகும் வெப்பநிலைக்கு ஏற்ப உள்ள தாவரங்கள் மட்டுமே பிழைத்திருக்கும். மற்ற தாவரங்கள் அழிந்துவிடும். உயிரினங்களிலும் அதேதான் நடக்கும். வெப்ப நிலையை தாக்குப்பிடிக்கும் உயிர்கள் பிழைத்திருக்கும். மேலும், புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே தோல் நோய்கள் உள்ளிட்டவை அதிகரிக்கும். எனவே இயல்பை நேசிப்போம்.

English summary
The distance between the Sun and the Earth is about 15 million km. But once a year this sun comes very close to earth. Today is that day. That is, this astronomical miracle will happen on January 04 in the year 2023.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X