புண்படுத்திய புதின்.. 3-வது உலகப் போர் வந்திடும்: ரஷ்யா நிலைப்பாட்டால் டிரம்ப் விரக்தி
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் காசா போர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட்டார். அடுத்ததாக எப்படியாவது ரஷ்யா-உக்ரைன் இடையே உள்ள பிரச்சனையை பேசி தீர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஆனால் பலமுறை முயற்சி செய்து பேச்சுவார்த்தை தோல்வியால் டிரம்ப் விரக்தியில் உள்ளார். இதனால் இது 3-வது உலகப்போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக இனிமேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் நெருங்கிய நாடாக உள்ள உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் ரஷ்யாவின் பேச்சை மீறி உக்ரைன் நோட்டோ படையில் சேர முயன்றது. இதனால் கோபம் அடைந்த ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதனால் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவி வழங்குகின்றன. அவற்றின் உதவியால் 3½ ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் நடந்து வருகிறது.

எப்படியாவது ரஷ்யாவை தனிமைப்படுத்தி சரணடைய வைக்க வேண்டும் என்று போராடிய அமெரிக்காவிற்கு இந்தியா சீனா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது பிடிக்கவில்லை. ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முடியாததால், போர் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.. அந்த கோபத்தில் தான் டிரம்ப்,இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இது ஒருபுறம் எனில் போரை நிறுத்துவதற்காக இரு நாடுகளின் தலைவர்களையும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 28 நிபந்தனைகள் அடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அவர் வழங்கினார். இந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அதிக சாதகமாக இருப்பதாக கூறி உக்ரைன் அதனை நிராகரித்து விட்டது. எனவே உடன்பாடு எட்டப்படாததால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்பிடம் ரஷ்யா மற்றும் உக்ரைனின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ரஷ்யா-உக்ரைன் போரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் பலியாகினர். மேலும் அப்பாவி மக்களும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த படுகொலைகள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு கடுமையாக உழைத்து வருகிறேன்.
அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். ஆனால் ரஷ்யா போரை நிறுத்த விரும்பவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட தயாராக இல்லை. இது எனக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இனிமேல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. இதே நிலை தொடர்ந்தால் 3-வது உலகப் போருக்கு வழிவகுக்கும்" இவ்வாறு டிரம்ப் கூறினார்.
-
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
டிரம்பின் கோல்டு காயின் பிசினஸ்.. அமெரிக்க அதிபர் சட்டத்தை மீறுகிறாரா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான்












Click it and Unblock the Notifications