நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் ஆதரவு கரம் நீட்டிய அமெரிக்கா.. உக்கிரமடையும் உக்ரைன்! இதுவரை பெற்ற ராணுவ உதவி இத்தனை கோடியா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் 37 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுத உதவிகளை மீண்டும் வழங்கியுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.31 கோடியாகும்.

ஆசிய பகுதிகளில் கிழக்கு நோக்கி தனது எல்லையை விரிவுபடுத்தக்கூடாது என்பதுதான் அமெரிக்காவிடம் முன்னாள் சோவியத் ஒன்றியம் போட்ட ஒப்பந்தமாகும். ஆனால் தற்போது நார்வே தொடங்கி துருக்கி வரை நேட்டோ தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. அதேபோல முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்து ஒன்றியம் உடைந்த பின்னர் அதிலிருந்து வெளியேறி தங்களை தனி நாடுகளாக அறிவித்துக்கொண்ட சின்ன சின்ன நாடுகளையும் நேட்டோ கைப்பற்றியுள்ளது.

இன்றைய மின்தடை! ஷார்ப்பா 9 மணிக்கு ஆப் ஆகிடும்.. 2 மணி வரை மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் இயங்காது இன்றைய மின்தடை! ஷார்ப்பா 9 மணிக்கு ஆப் ஆகிடும்.. 2 மணி வரை மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் இயங்காது

இந்த கைப்பற்றலில் ஒரு பகுதியாகதான் உக்ரைனை தனது வலையில் விழவைத்துள்ளது. உக்ரைன் என்பது சிறிய நாடாக இருந்தாலும் ஒட்டுமொத்த ரஷ்யாவின் உணவு தேவையில் சுமார் 27 சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு அந்நாட்டில் இயற்கை வளங்கள் இருக்கின்றன. எனவே இந்நாட்டை நேட்டோவில் இணைக்க அமெரிக்க முயல, அதற்கு உக்ரைனும் சம்மதிக்க ரஷ்யா இதனை எதிர்த்து போரை அறிவித்தது. உலக நாடுகள் அனைத்தும் இதனை போர் என்று சொல்ல ரஷ்யா இதனை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைத்து வருகிறது.

மீண்டும் 24.9 பில்லியன் டாலர்

மீண்டும் 24.9 பில்லியன் டாலர்

தொடக்கத்தில் ரஷ்யாவின் கை போரில் ஓங்கி இருந்தாலும், தற்போது உக்ரைன் கொஞ்சம் கொஞ்சமாக பலமடைந்து வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆயுத உதவிதான். இந்த போர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கினாலும், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்தே அமெரிக்கா, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை செய்து வந்துள்ளது. தற்போதுவரை 29 முறை இவ்வாறு ராணுவ உதவிகளை செய்து வந்திருக்கிறது. இந்த 29 முறையும் சேர்த்து கணக்கிட்டால் சுமார் 24.9 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அமெரிக்கா, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை செய்திருக்கிறது.

இந்தியாவிட அதிகம்

இந்தியாவிட அதிகம்

இந்திய மதிப்பில் இது ரூ.20 லட்சம் கோடியாகும். இந்தியாவின் கடந்த ஆண்டு ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.5 ஆயிரம் கோடிதான். அப்படி இருக்கையில் உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ராணுவ உதவிகள் எவ்வளவு பெரியது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

அதேபோல ரஷ்யா இந்த ஆண்டு சுமார் 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது. இதில் 33.3 சதவிகிதம் அளவுக்கு உக்ரைன் அமெரிக்காவிடமிருந்து உதவிகளை பெற்றிருக்கிறது. இந்த அளவுக்கு பலத்தை கொண்டுதான் தற்போது உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து வருகிறது.

ஒத்திகை

ஒத்திகை

தற்போது அமெரிக்கா சார்பில் பீரங்கிகள், கவச வாகனங்கள், வான்வெளியிலிருந்த வீசப்படும் ஏவுகணைகள் ஆகியவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மட்டுமல்லாது பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு உதவ முன் வந்திருக்கிறது. இந்நிலையில் இதனையெல்லாம் பார்த்த ரஷ்யா சீனாவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. தென் கிழக்கு சீன கடலில் சமீபத்தில் ரஷ்யா மற்றும் சீன போர்க்கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. இவ்வாறு அடிக்கடி நிகழ்வது கிடையது. எப்போதாவது அரிய சந்தர்ப்பத்தில் மட்டுமே இவை நிகழும்.

ரஷ்யாவுடன் இணையும் சீனா

ரஷ்யாவுடன் இணையும் சீனா

அதேபோல இந்த ஒத்திகையின் முடிவில் இரு நாட்டு அதிபர்களும் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடினர். இதில் சீனா தங்களுக்கு தொடர்ந்து அதரவளிக்க வேண்டும் என்று ரஷ்யா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு சீனாவும் சம்மதித்துள்ளன. ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகள் போரில் குதித்தால் நிச்சயம் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கும். சீனாதான் உலக அளவில் தற்போது இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறது. இப்படி இருக்கையில் ரஷ்யாவுடன் கைகோர்த்தால் அமெரிக்காவுக்கு பலத்த அடி விழும் என்பது நிச்சயம்.

English summary
As Russia continues to wage war on Ukraine over its opposition to NATO membership, the United States has re-provided another $3.7 million in arms aid to Ukraine. In Indian terms it is Rs.31 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X