அமெரிக்காவில் டிக்டாக் தடை.. கதறும் யூத்கள்.. டிரம்ப் வருகைக்காக காத்திருக்கும் டிக்டாக்.. ஏன்?
நியூயார்க்: அமெரிக்காவில் TikTok தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் அந்த செயலி ஆஃப்லைனில் உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டிக்டாக் தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் செயலியைத் தடை செய்யும் சட்டம் திட்டம் அமலுக்கு வந்து உள்ளது.
இந்த டிக்டாக் செயலி மீது கடுமையான சில புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்தின் கீழ் இருப்பதால் அமெரிக்காவில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பைட்டான்ஸ் நிறுவனம் அந்நாட்டு அரசின் proxy நிறுவனம் என்ற புகார் உள்ளது.

அதாவது பைட்டான்ஸ் நிறுவனம் சீனாவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இவர்கள் உலகம் முழுக்க மக்களின் டேட்டாவை எடுக்கிறார்கள். இதன் மூலம் சீனா மக்களை கட்டுப்படுத்துகிறது. தங்களின் பொருட்களை விற்கிறது. அதோடு இல்லாமல் பல ரகசிய தகவல்களை கூட திரட்டுகிறது என்று புகார் உள்ளது. ஏற்கனவே அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ தளவாடங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது.
உலகம் முழுக்க பல ராணுவத்தில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது. இந்த நிலையில்தான் அதிபர் பிடன் ஆதரவோடு அமெரிக்காவில் இந்த செயலியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின்படி அந்த செயலியை பயன்படுத்த முடியாது. அதேபோல் புதிதாக டவுன்லோட் செய்யவும் முடியாது.
மெசேஜ்:
இதற்காக பயனர்களுக்கு டிக்டாக் வெளியிட்டுள்ள மெசேஜில்.. "இப்போதைக்கு நீங்கள் டிக் டாக்கைப் பயன்படுத்த முடியாது". அதிபர் டிரம்ப் பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வோம். டிரம்ப் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது, என்று டிக் டாக் நிறுவனம் கூறி உள்ளது.
டிக் டாக் செயலி மீதான தடையை டிரம்ப் விரும்பவில்லை. திங்கள் கிழமை அவர் அதிபராகிறார். அமெரிக்க நாட்டின் அதிபராக வெற்றிபெற்றுள்ள டிரம்ப்.. ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். டிக்டாக் செயலியின் அமெரிக்க கட்டுப்பாடுகளை மட்டும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அதை தடை செய்ய மாட்டோம் என்று அமெரிக்கா கூறி உள்ளது. ஆனால் இதை டிக்டாக் - பைட் டான்ஸ் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிரம்ப் வந்தால் டிக் டாக் நிறுவனத்திற்கு மேலும் 90 நாட்கள் அவகாசம் வழங்குவார் என்று கூறப்படுகிறது. அல்லது வேறு மாதிரியான ஆபர்களை வழங்குவார்.
இந்தியாவில் தடை:
உலகம் முழுக்க இந்தியா தவிர பல நாடுகளில் டிக்டாக் மிகவும் பிரபலமாக உள்ளது. டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன. அமெரிக்காவே கிட்டத்தட்ட டிக்டாக் செயலிக்கு அடிமையாகி உள்ளது.
அதன்படி டிக்டாக் செயலியை அங்கே வீடியோ போடா மட்டுமின்றி தங்களின் பிஸ்னஸ் வேலைகளுக்கு, பொருட்களை விற்க, வகுப்புகளை எடுக்க கூட பயன்படுத்துகின்றனர். நம்ம ஊரில் எப்படி இன்ஸ்ட்டா ரீல்ஸ் இருக்கிறதோ அப்படித்தான் அமெரிக்காவில் டிக்டாக் இருக்கிறது. நம்ம ஊரில் இவங்க தலைக்கட்டு என்றால்.. அந்த ஊரில் அவங்க தலைக்கட்டு!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications