நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹாங்காங்கில் செக்.. 28 வருட ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்.. சீனாவிற்கு எதிராக சீறும் அமெரிக்கா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்து இருக்கும் சிறப்பு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது ஹாங்காங்கிற்கு அமெரிக்கா அளித்து வந்த சிறப்பு அதிகாரம் மற்றும் சலுகையை மொத்தமாக நீக்குவதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

Recommended Video

    America VS China | Hong Kong’s special status-ஐ ரத்து செய்த Trump | Oneindia Tamil

    சீனா அமெரிக்கா இடையே தென் சீன கடல் எல்லையில் மோதல் நிலவி வரும் நிலையில், தற்போது இன்னொரு பக்கம் ஹாங்காங் மூலம் இரண்டு நாடுகளும் மோதி வருகிறது.

    சீனாவில் சுதந்திரமான தனி பிராந்தியமாக இருக்கும் ஹாங்காங் இருந்து வருகிறது. சீனாவில் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமை கொண்ட மாகாணமாக ஹாங்காங் இருக்கிறது. ஆனால் இதன் சிறப்பு அந்தஸ்த்தை நீக்க சீனா முயன்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக அங்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது.

    திணறும் அமெரிக்கா.. மோசமாகும் நிலை.. உலகம் முழுக்க ஒரே நாளில் 215,389 கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு திணறும் அமெரிக்கா.. மோசமாகும் நிலை.. உலகம் முழுக்க ஒரே நாளில் 215,389 கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு

    மொத்த முடிவு எதிர்ப்பு

    மொத்த முடிவு எதிர்ப்பு

    இது மொத்தமாக ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டு இருக்கும் தன்னாட்சி அதிகாரத்தை நீக்கும் சட்டம் என்று பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹாங்காங்கில் சீனா யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும். இதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வந்தது. இந்த நிலையில் ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்து இருக்கும் சிறப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது ஹாங்காங்கிற்கு அமெரிக்கா அளித்து வந்த சிறப்பு அதிகாரம் மற்றும் சலுகையை மொத்தமாக நீக்குவதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    சட்டத்தின் பின்னணி

    சட்டத்தின் பின்னணி

    இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கா - ஹாங்காங் ஒப்பந்தம் 1992 என்று இந்த ஒப்பந்தம் அழைக்கப்படுகிறது. ஹாங்காங் தனி அதிகாரம் கொண்ட பிரிவு என்பதால் அவர்களுடன் கூடுதல் வர்த்தகத்தை செய்யவும், ஹாங்காங்கிற்கு நிறைய சலுகைகளை வழங்கவும் அமெரிக்கா முடிவு எடுத்து இந்த ஒப்பந்தத்தை செய்தது.தற்போது 28 வருடங்களுக்கு பின் டிரம்ப் அதை நீக்கி இருக்கிறார்.

    ஒரே மாதிரி

    ஒரே மாதிரி

    இது தொடர்பாக பேசி உள்ள டிரம்ப், இனி ஹாங்காங்கிற்கு சிறப்பு அந்தஸ்து எதுவும் கிடையாது. நாங்கள் எப்படி சீனாவை அணுகுகிறோமோ அதேபோல் இனி ஹாங்காங்கை அணுகுவோம். அதே போல் ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறிக்க காரணமாக இருந்த சீன அதிகாரிகள் மீது இனி அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும். இதற்கு சீனாதான் முழு பொறுப்பு.

    சுதந்திரம் பறிப்பு

    சுதந்திரம் பறிப்பு

    ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை சீனா பறித்து உள்ளது. சீனா ஹாங்காங் மட்டுமின்றி மற்ற நாடுகள் மீதும் இதேபோல் அழுத்தத்தை அளித்து வருகிறது. ஹுவாவே போன் மூலம் உலகம் முழுக்க முறைகேடுகளை சீனா செய்து வருகிறது. இன்றுதான் ஹுவாவே போன்களை பயன்படுத்த மாட்டோம் என்று யுகே அறிவித்தது. சீனாவை பல விஷயங்களில் நாம் நம்ப முடியாது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா பல உண்மைகளை மறைத்துவிட்டது. சீனாதான் இந்த பரவலுக்கு முழுக்காரணம். சீனா இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் நான் பேசவில்லை. அவரிடம் பேசும் திட்டம் எதுவும் இல்லை, என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    Trump cancels whole special agreement with Hong Kong against China

    English summary
    Trump cancels whole special agreement with Hong Kong against China today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X