டிரம்ப் தயாராக இருக்கிறார்.. விரைவில் தன்னை யார் என்று நிரூபிப்பார்.. வெள்ளை மாளிகை பரபர அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நேர்மையை செனட் சபையில் நிரூபித்து மக்கள் மத்தியில் தன்னுடைய புகழை மீட்பார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நேர்மையை செனட் சபையில் நிரூபித்து மக்கள் மத்தியில் தன்னுடைய புகழை மீட்பார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பல நாட்களாக கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க அதிபருக்கு எதிராக வைக்கப்பட்ட அதிகார துஷ்பிரயோக புகார்கள் மீது அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை இன்று முக்கிய முடிவு எடுத்துள்ளது.இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 179 பேர் வாக்களித்தனர்.

வெள்ளை மாளிகை அறிக்கை
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது மிக மோசமான தினம். அமெரிக்காவில் ஆளும் கட்சியான குடியரசு கட்சி ஒரு வாக்கு கூட டிரம்பிற்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதேபோல் டிரம்பிற்கு எதிராக ஒரு புகாருக்கு கூட ஆதாரம் அளிக்கப்படவில்லை. ஆனாலும் ஜனநாயக கட்சி பதவி நீக்க தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியாயம்
டிரம்பிற்கு எதிரான விசாரணை நியாயமாக நடத்தப்படவில்லை. அவருக்கு எதிராக அரசு அதிகாரிகள், நாடாளுமன்றம், செய்தியாளர்கள் என்று எல்லோரும் செயல்பட்டு இருக்கிறார்கள்.அனைத்து விதமான விதிகளையும் புறந்தள்ளிவிட்டு அவர்கள் இதை செயல்படுத்தி உள்ளனர்.

அமெரிக்க மக்கள்
அமெரிக்க மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. இந்த விசாரணையில் பல முறைகேடுகள் நடந்தது. மக்களுக்கு இதன் உண்மை தெரியும். ஜனநாயக கட்சி 2020 அதிபர் தேர்தலில் இதனால் மோசமாக தோல்வி அடையும்.

அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நியாயத்தை செனட் சபையில் நிரூபிப்பார். அவர் இந்த தீர்மானத்தை, விசாரணையை செனட் சபையில் முறியடிப்பார். அவர் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறார். அவருக்கு நியாயம் கிடைக்கும் என்பதில் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார், என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications