அணு ஆயுத பவர்.. டிரம்ப் கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம்.. ஈரானை தாக்க இப்படி ஒரு திட்டமா! போச்சு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு வருகிறாராம். ஈரான் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் திடீரென ஜி7 மாநாட்டில் இருந்து வெளியேறியது, வெள்ளை மாளிகையில் நடந்த உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிக்கலாம் என்ற ஊகத்திற்கு, டிரம்ப் ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Israel Iran

டிரம்ப் - இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா

அமெரிக்க ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களில் அமெரிக்காவும் பங்கேற்பது குறித்து டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு குழுவுடன் டிரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.

மூத்த உளவுத்துறை அதிகாரி மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள், ஈரான் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் பல நாட்களாக நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவும் இணையக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

ஈரானின் சுரங்கப்பாதை செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா குண்டு வீசி அளிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் அழைப்பு

ஏற்கனவே ஈரான் மீதான தாக்குதலில், முக்கியமாக ஈரானின் அணு மையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா தங்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்து உள்ளது இஸ்ரேல்.

ஈரானின் ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் தளத்தை அழிக்க இஸ்ரேலிடம் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேலிடம் போதுமான பதுங்கு குழி தகர்ப்பு வெடிகுண்டுகளோ அல்லது பெரிய குண்டுவீச்சு விமானங்களோ இல்லை. ஃபோர்டோவ் தளம் மலையின் கீழ் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ஈரானுக்கு பறந்து சென்று தாக்கக்கூடிய விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளன.

டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலின் நடவடிக்கையிலிருந்து இதுவரை விலகியே உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்தாலும்.. நாங்கள் இந்த தாக்குதலுக்கு உதவவில்லை என்றே அமெரிக்கா கூறி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை என்று அமெரிக்கா உறுதியாக கூறி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்து உள்ளது இஸ்ரேல். ஈரான் மீதான தாக்குதலில் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது. இதில் அமெரிக்கா உதவி செய்யும் பட்சத்தில் அது உலகப்போராக வெடிக்கும் அபாயங்கள் உள்ளன.

இந்த விவகாரம் மிகப்பெரிய போராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய 'ஆபரேஷன் லயன்' தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் மிக மோசமானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், இது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

டிரம்ப் எச்சரிக்கை

நேற்று இரவு டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் கமேனி இருப்பிடம் குறித்து எங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது அவர் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.

அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது; ஈரான் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஈரான் நிபந்தனையற்ற சரணடைவதே ஒரு தீர்வு என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார். ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது.

ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன்.. ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள் என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.

ஈரானிடம் நல்ல வான் கண்காணிப்பு கருவிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் நிறைய உள்ளன. ஆனால், அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை. போர் என்று வந்துவிட்டால் அமெரிக்காதான்.. அமெரிக்காவை விட யாரும் சிறப்பாக செய்ய முடியாது

ஈரானின் உயர்மட்ட தலைவர் கமேனி எங்கு இருக்கிறார் என்பது அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியும். அவர் ஒரு எளிய இலக்கு தான், ஆனால் அவர் பாதுகாப்பாக இருக்கிறார். இப்போதைக்கு அவரை நாங்கள் தாக்கப்போவதில்லை. ஆனால், ஈரானியர்கள் பொதுமக்கள் மீதோ அல்லது அமெரிக்க வீரர்களின் மீதோ ஏவுகணைகளை வீச வேண்டாம். எங்கள் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்று எச்சரித்துள்ளார். இதன் காரணமாக ஈரான் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+