உலகம் முழுவதும் தரமான கல்விக்கு இன்னும் 4.4 கோடி ஆசிரியர்கள் தேவை! ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
நியூயார்க்: உலகம் முழுவதும் இன்று சர்வதேச ஆசியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை கொடுக்க கூடுதலான ஆசியர்கள் தேவை என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு சிறந்த சமுதாயத்திற்கும் பின்னால் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். அந்த அளவுக்கு சமூகத்தின் மாற்றத்திற்கு ஆசிரியர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தற்போது வரை பல்வேறு நாடுகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளிலும், ஏழ்மையான நாடுகளிலும் ஆசிரியர் பற்றாக்குறையானது மிக அதிகமானதாக இருக்கிறது. இது கல்வியின் தரத்தை கேள்வியெழுப்புகிறது.

இந்தியாவிலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமான அளவில் இருக்கிறது. ஒரே ஆசிரியர் பல்வேறு பாடங்களை எடுக்க வைக்க கட்டாயப்படுத்தப்படுவது, குறைவான ஊதியத்திற்கு பணியமர்த்தப்படுவது, போதிய கல்வி இல்லாமல் தனியார் கல்வி நிலையங்களில் ஆசியர்களாக சிலர் பணியமர்த்தப்படுவது என பல்வேறு சிக்கல்களை இந்திய கல்வி சூழல் எதிர்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் ஆசிரியர்களின் போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை போக்க வேண்டும் என்று வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட மறுத்தார்கள். இதனையடுத்து இன்று அதிகாலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி இருக்கையில்தான் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் முக்கியமான வலியுறுத்தலை முன்வைத்திருக்கிறார். அதாவது, சர்வதேச அளவில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை கொடுக்க தற்போது இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட 4.4 கோடி கூடுதல் ஆசிரியர்கள் தேவை என்பதுதான் அந்த வலியுறுத்தல்.












Click it and Unblock the Notifications