பள்ளிக்கு வெளியே 10 சிறுமிகள்.. பல்கலைக்கு வெளியே 1 லட்சம் மாணவிகள்! தாலிபான்களை விளாசும் ஐநா

சர்வதேச கல்வி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் ஆப்கனில் பெண் கல்விக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஐநா தாலிபன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சர்வதேச கல்வி தினம் நேற்று (ஜன.24) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், ஆப்கனில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் ஆப்கனிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். சினிமா, இசை, விளையாட்டு என பல விஷயங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இவர்களுடைய கவனம் பெண்கள் பக்கம் திரும்பியது. முதலில் கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி பள்ளிகள் அந்நாட்டில் மூடப்பட்டன.

அதன் பின்னர் 6ம் வகுப்புக்கு மேல் உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டன. அதில் மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும் எனவேதான் மாணவிகளை பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளதாகவும் தாலிபன் அரசு புதிய விளக்கத்தை கொடுத்தது. முதலில் பள்ளிகளில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட தடையானது பின்னர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் வரை பரவியது.

ஐநா

ஐநா

இந்த சூழலில்தான் நேற்று சர்வதேச கல்வி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் "கல்வி கற்க பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்ப பெறுமாறு ஆப்கன் அரசை வலியுறுத்துகிறோம்" என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார். இது குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது, "கல்வி என்பது அடிப்படை உரிமையாகும். அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை உருவாக்குவதற்கான உண்மையான நடவடிக்கைகள் எடுப்பதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டிய நேரம் இது.

யுனெஸ்கோ

யுனெஸ்கோ

கல்வி பெறுவதை தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரமும் இதுதான். குறிப்பாக ஆப்கனிஸ்தானில் பெண் கல்விக்கு குறுக்காக உள்ள சட்ட தடைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருளாக, "மக்களில் முதலீடு செய்யுங்கள். கல்விக்கு முன்னுரிமை அளியுங்கள்" என்பதை ஐநா வகுத்திருக்கிறது. அதேபோல இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினத்தை ஆப்கனிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அர்ப்பணிக்க 'யுனெஸ்கோ' முடிவெடுத்துள்ளதாக அதன் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே கூறியுள்ளார்.

பள்ளிக்கு வெளியே

பள்ளிக்கு வெளியே

தற்போதைய சூழலில் இந்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களில் சுமார் 80% பேர் பள்ளி கல்லூரிக்கு போகாமல் வீட்டில் அடைந்து கிடக்கின்றனர் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது. ஆப்கன் அரசின் இந்த தடைக்கு பல்வேறு மனிதாபிமான அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எஜுகேஷன் கேனாட் வெயிட் (ECW) எனும் அமைப்பு ஆப்கன் அரசின் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகள் பள்ளிகளில் விதிக்கப்பட்டுள்ள தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

போராட்டம்

போராட்டம்

அதேபோல 1 லட்சத்திற்கும் அதினமாக இளம்பெண்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆனால் இதன் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் ஆண்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தடைவிதிக்கப்படுவதாகவும் ஆப்கன் அரசு கடந்த டிசம்பரில் சட்டம் இயற்றியிருந்தது. இதன் காரணமாக கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை தவிர அனைத்து பணிகளிலிருந்தும் பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு எதிரான இந்த தாக்குதலை எதிர்த்து பெண்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+