Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசாவை விட்டு விரட்டப்படும் 10 லட்சம் மக்கள்! எந்த நாட்டுக்கு போறாங்க? டிரம்ப் செய்யும் வேலை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்தி காசாவை கட்டுப்பாட்டுக்குள் எடுக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஆனால் காசா மக்களை பிற நாடுகள் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் 10 லட்சம் காசா மக்களை நிரந்தரமாக லிபியாவில் குடியேற்ற அமெரிக்க அதிபர் திட்டமிட்டுள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடும் மோதல் இருந்தது. இந்த மோதல் போராக மாறி உள்ளது. 2023 அக்டோபர் மாதம் முதல் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது.

us-president-donald-trump-planning-to-permanently-relocate-1-million-palestinians-to-libya-says-nbc

இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலில் காசா நகரம் அழிவின் விளிம்பில் உள்ளது.

மொத்தம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான காசா மக்கள் பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி உயிருக்கு பயந்து ஏராளமான மக்கள் காசாவை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த போரை எடுத்து கொண்டால் அமெரிக்கா, இஸ்ரேல் பக்கம் உள்ளது. மேலும் தொடரும் போரை முடிவுக்கு கொண்டு வரவும், வரும் காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கும் காசா மக்களை நிரந்தரமாக வெளியேற்றுவது தான் தீர்வு என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், ‛‛காசா முனையில் நரகத்தின் படுகுழியில் பாலஸ்தீன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களை மீண்டும் மீண்டும் அதே காசாவில் வசிக்க சொல்வது சரியல்ல. 100 ஆண்டாக நடக்கும் அதே சண்டை மீண்டும் நடக்கும். மக்கள் கொத்து கொத்தாக இறப்பார்கள். மீண்டும் வாழ்க்கையை துவங்குவார்கள். பிறகு பரிதாபமாக இறப்பார்கள். இதனால் காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போகிறது. அது இனி அமெரிக்காவுக்கு தான் சொந்தம்.

காசாவில் வீட்டு வசதிகள் ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அதற்கு முன்பு பாதிக்கப்பட்ட காசா மக்கள் நகரத்தை காலி செய்ய வேண்டும். அவர்களை பக்கத்து நாடுகள் ஏற்க வேண்டும். இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும். காசாவில் இருந்து மக்கள் முற்றிலும் வெளியேறிய பிறகு எங்கள் வேலையை நாங்கள் தொடங்குவோம். பின்னர் காசா ஒரு சர்வதேச நகரமாக விளங்கும். அனைத்து நாட்டு மக்களும் அங்கு வாழ முடியும். மத்திய கிழக்கின் அற்புதமான இடமாக காசா முனை மாறி விடும்'' என்றார்.

இதனை இஸ்ரேல் வரவேற்றது. ஆனால் இஸ்லாமிய நாடும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமின்றி காசா மக்களை ஏற்கும்படி ஜோர்டான், எகிப்து உள்பட பல நாடுகள் மறுத்துவிட்டன. இது டிரம்புக்கு பிரச்சனையாக மாறியது.

காசா மக்களை வெளியேற்ற முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் மாற்று ஏற்பாட்டை கையில் எடுத்துள்ளார். அதாவது காசாவில் வசிக்கும் 1 மில்லியன் (10 லட்சம்) மக்களை வெளியேற்றி லிபியா நாட்டில் நிரந்தரமாக குடியேற்ற முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான திட்டத்தை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாரித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக லிபியாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று என்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் லிபியாவுக்கான பல பில்லியன் டாலரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. காசாவில் இருந்து 10 லட்சம் மக்களை ஏற்றுக்கொண்டால் அந்த நிறுத்தி வைக்கப்பட்ட தொகையை விடுவிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது வரை இதில் உடன்பாடு என்பது எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை மட்டுமே போய் கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த தகவலை அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். ஆனாலும் கூட டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் லிபியாவுடன் திரைமறைவில் தீவிரமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.

லிபியாவை எடுத்து கொண்டால் அந்த நாடும் மோசமான நிலையில் தான் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் நேட்டோ நாடுகளின் ஆதரவில் நடந்த மோதலில் லிபியாவின் சர்வாதிகாரியாக செயல்பட்டு வந்த மோமர் கடாஃபி கொல்லப்பட்டார். அதன்பிறகு நாடு மோசமான நிலைக்கு சென்றது. நாடுகள் கிழக்கு, மேற்கு என்று இருபிரிவாக பிளவுப்பட்டு உள்ளது. இந்த நாடு என்பது வடஆப்பிரிக்கா நாடாக உள்ளது. அதிக நிலப்பரப்பை கொண்ட நாடுகளில் ஆப்பிரிக்காவில் 4வது பெரிய நாடாகவும், மொத்த உலகளவில் 16வது பெரிய நாடாகவும் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களிடம் 96 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். 2 சதவீதம் வரை கிறிஸ்தவர்கள் உள்ளனர். மொத்த மக்கள் தொகை என்பது 73.1 லட்சமாக மட்டுமே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+