நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்த விதிமீறல்.. விசாரணையை தொடங்கும் "ஸ்பெஷல் டீம்".. ஆரம்பமே அதிரடி

Google Oneindia Tamil News

நியூயார்க்: வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் விதி மீறல் செய்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை ஸ்பெஷல் டீம் செய்ய உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில்.. டிரம்ப் கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். ஆட்சி, அதிகாரம் என்பதை தாண்டி ஜெயிலுக்கு செல்வதை தவிர்ப்பதற்காவது டிரம்ப் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஆம், அந்த அளவிற்கு டிரம்ப் மீது வரி மோசடி, அதிகார மீறல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தது, அணு ஆயுத ஒப்பந்தங்களை மீறியது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் இவர் ஜெயிலுக்கு செல்ல கூடிய அளவிற்கும் நிறைய முறைகேடுகளை செய்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது... இதனால் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காவது டிரம்ப் வெற்றிபெற்றாக வேண்டும்.

வெற்றி

வெற்றி

இந்த நிலையில்தான் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் விதி மீறல் செய்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை ஸ்பெஷல் டீம் ஒன்று செய்ய உள்ளது. அதாவது வெள்ளை மாளிகையை தேர்தல் பயன்பாட்டிற்கு இவர் பயன்படுத்தி உள்ளார். பெடரல் அதிகாரிகள் சிலரையும் இவர் தேர்தல் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி உள்ளார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

தேர்தல்

தேர்தல் நடந்த தினத்தில்.. வெள்ளை மாளிகையில் டிரம்ப் விதிகளை மீறி செயல்பட்டு இருக்கிறார். அங்கு இருக்கும் கிழக்கு அறையை தேர்தல் வார் ரூம் போல பயன்படுத்தி உள்ளார். வெள்ளை மாளிகையில் இருக்கும் இன்னொரு பகுதியிலும், தேர்தல் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி இருக்கிறார். இங்கு அமெரிக்க அரசின் பெடரல் அதிகாரிகள், அரசு ஊழியர்களை டிரம்ப் தேர்தல் பணிக்கு பயன்படுத்தி உள்ளார்.

விதிமீறல்

விதிமீறல்

இதன் காரணமாக டிரம்ப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் Hatch Act எனப்படும் விதியை இவர் மீறி உள்ளார். வெள்ளை மாளிகை மற்றும் அதிபர் அதிகாரத்தை இவர் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் யு.எஸ்.ஆபிஸ் ஆப் ஸ்பெஷல் கவுன்சில் எனப்படும் சிறப்பு கவுன்சில் இதை விசாரிக்க உள்ளது.

அதிபர்

அதிபர்

பொதுவாக அதிபரின் முறைகேடுகளை கவனித்து அதை ஆய்வு செய்யும் இந்த கவுன்சில் இதையும் விசாரணை செய்ய உள்ளது. ஜனநாயக கட்சியின் பிரதிநிதி பில் பாஸ்கேரெல் இதை உறுதி செய்துள்ளார். டிரம்ப் செய்த விதிமீறலை விசாரிக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் அதிகாரபூர்வ விசாரணை தொடங்கும் என்கிறார்கள் .

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

ஆனால் இந்த புகார்களை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இங்கே விதிமீறல் செய்யப்படவில்லை. பெடரல் அதிகாரிகள் யாரும் விதிகளை மீறவில்லை. Hatch Act குறித்து புகார் எழுப்புவது இப்போது தேவையில்லாத விஷயம் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

English summary
US Presidential Election 2020: Trump did not follow Hatch Act, Special Counsel will investigate soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X