3வது உலகப்போரே வந்தாலும் பரவாயில்லை.. அதுமட்டும் நடக்காது! பிடன் பரபரப்பு வார்னிங்.. என்ன நடந்தது?
நியூயார்க்: ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா அதிபர் பிடன் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 3ம் உலகப்போர் பற்றியும் அவர் பேசியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 17வது நாளை எட்டி உள்ளது. உக்ரைனில் சுமி உள்ளிட்ட ரஷ்ய எல்லை நகரங்களில் கடுமையான தாக்குதல்களை ரஷ்ய படைகள் நடத்தி வருகிறது.
இந்த போரில் தலையிட மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் பிடன் முன்பே அறிவித்துவிட்டார். இந்த நிலையில் நேற்று ஜனநாயக கட்சியினரிடம் பிடன் முக்கியமான சில விஷயங்களை பேசினார்.

அதிபர் பிடன்
அதிபர் பிடன் தனது பேச்சில், உக்ரைன் போரில் அமெரிக்கா தலையிடாது. எங்கள் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உக்ரைன் போரில் அமெரிக்கா தலையிட்டால் அது அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நேரடி மோதலுக்கு வழி வகுக்கும். உக்ரைன் வான்வெளியை தடை செய்வதற்கான கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாது. அப்படி செய்தால் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உக்ரைன் போர்
அப்படி செய்வது அமெரிக்காவை போருக்குள் கொண்டு செல்லும். உக்ரைனுக்கு ஏற்கனவே நேட்டோவின் உறுப்பு நாடுகள் உதவி வருகின்றன. நேட்டோவின் உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ஆனால் உக்ரைன் கேட்பது போல நேரடியாக நேட்டோ அதிகாரபூர்வமாக உதவி செய்ய முடியாது. அப்படி செய்தால் அது உலகளாவிய போருக்கு வழி வகுக்கும்.

நேட்டோ படை
ஆனால் நேட்டோ படையில் உள்ள நாடுகளை காப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அது அமெரிக்காவின் தார்மீக கடமை. நேட்டோ படையில் உள்ள நாடுகளுக்கு எதுவும் ஆகாது. ஒரு நேட்டோ நாடு தாக்கப்பட்டால் அது எல்லா நேட்டோ நாடுகளையும் தாக்குவதற்கு சமம். அதனால்தான் ரஷ்ய எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளுக்கு 12000 படைகளை அனுப்பி உள்ளோம்.

3ம் உலகப்போர்
லத்வியா, எஸ்தோனியா, லித்துவானியா, ரோமானியாவிற்கு அமெரிக்கா படைகளை அனுப்பி உள்ளது. நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு இன்ச் நிலத்தையும் நாங்கள் காப்போம். ரஷ்யா இங்கே தாக்குதல் நடத்த கூடாது. முடியாது. அதையும் மீறி செய்தால் அதற்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். அதனால் மூன்றாம் உலகப்போரே ஏற்பட்டாலும் சரி, நாங்கள் நேட்டோவின் ஒரு இன்சை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். அது எங்கள் கடமை என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications