ஈரான் மீது தாக்குதல் நடத்த.. டிரம்ப் முடிவு! ஆனால் கடைசி நொடியில் நிறுத்தப்பட்ட பிளான்! என்ன காரணம்?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்து உள்ளாராம். நேற்று நடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டத்தில் அவர் இந்த தனிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் அவர் அளித்த போட்ட இந்த "பர்சனல்" திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது,
ஈரான் அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா என்று பார்த்துவிட்டு அதன்பின் தாக்குதல் நடத்தலாம் என அவர் முடிவு செய்துள்ளார். அதோடு காங்கிரஸ் ஒப்புதல், அதாவது நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் டிரம்ப் இந்த தாக்குதலை நடத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத்தை குவித்து வருகிறது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபத்திய தாக்குதல்களில் ஈரானில் 450க்கும் மேற்பட்டோர், இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புதல்: இறுதி உத்தரவு நிறுத்தி வைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த தனது உயர்மட்ட உதவியாளர்களிடம் ஒப்புதல் தெரிவித்திருந்தார். ஆனால், இன்னும் இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்தும் வரை பொறுத்திருந்து பார்க்க டிரம்ப் விரும்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் ஃபோர்டோவ் செறிவூட்டல் ஆலை அமெரிக்காவின் இலக்குகளில் ஒன்றாக இருக்கலாம். இது நிலத்தின் அடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. இதனை அழிப்பது மிகவும் கடினம். சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் மட்டுமே அதை தகர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்த முடிவு செய்துவிட்டீர்களா என்று டிரம்ப்பிடம் கேட்டபோது, "நான் அதைச் செய்யக்கூடும், செய்யாமலும் போகலாம்" என்று பதிலளித்தார். மேலும், "அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். ஒரு வாரத்திற்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்" என்றும் அவர் கூறினார். ஈரான் நிபந்தனையின்றி தனது அணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பதை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டிரம்ப் திட்டவட்டம்
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இஸ்ரேல் ஈரான் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் தருவாயில் இருந்தது. ஆனால் இப்போது இஸ்ரேல் முழு வெற்றி பெற வேண்டும்... போர் நிறுத்தம் வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனியின் அணு ஆயுத கனவுகள் மீது எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது.. அதை அனுமதிக்கவே முடியாது.
நாங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. முழுமையான வெற்றிதான் வேண்டும்.. மீண்டும் சொல்கிறேன், வெற்றி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும்: அணு ஆயுதம் இல்லாத ஈரான்.. அதுதான் எங்கள் வெற்றி என்று டிரம்ப் கூறி உள்ளார்.
ஈரானின் பலப்படுத்தப்பட்ட ஃபோர்டோவ் அணு ஆயுத நிலையத்தை தாக்கும் அமெரிக்காவின் ராணுவ திறனைப் பற்றி கேட்டபோது, "அதைச் செய்யக்கூடிய திறன் நம்மிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அதற்காக நான் அதைச் செய்வேன் என்று அர்த்தமல்ல," என்று அவர் கூறினார். இதன் மூலம் தாக்குதல் நடத்தாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது என்பதை சூசகமாக தெரிவித்தார்.
முன்னதாக, ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனி, ஈரான் நாடு ஒருபோதும் சரணடையாது என்று கூறியிருந்தார். மேலும் அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications