93% சான்ஸ் இருக்கு.. சல்லி சல்லியாக நொறுங்கும் அமெரிக்க சாம்ராஜ்ஜியம்.. ஐடி ஊழியர்களுக்கு வார்னிங்
நியூயார்க்: அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 93% ஆக உயர்ந்துள்ளதாக UBS வங்கி எச்சரித்துள்ளது. 2025 மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த அதிகபட்ச அபாய அளவுகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பொருளாதார மாற்றங்களை துல்லியமாக சுட்டிக்காட்டியதன் மூலம், இந்த அளவுகள் வரலாற்று ரீதியாக கவலைக்குரியவை என UBS கூறுகிறது.
அதாவது இது வெறும் எச்சரிக்கை அல்ல.. அமெரிக்கா உண்மையில் பொருளாதார மந்த நிலைக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக இதில் கூறப்பட்டு உள்ளது.

பொருளாதார மந்த நிலைக்கு செல்லும் அமெரிக்கா
UBS அதன் ஆய்வுகளுக்கு கணக்கெடுப்பு அடிப்படையிலான அளவீடுகளை விட, உண்மையான பொருளாதாரத் தரவுகளையே பயன்படுத்துகிறது. தனிநபர் வருமானம், நுகர்வு, தொழில்துறை உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய காரணிகளை வங்கி உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட ஒரு சிறிய சரிவிற்கு பின் அமெரிக்கா மீண்டும் மிகப்பெரிய சரிவை நோக்கி செல்லலாம் என்று இதில் கணிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா பொருளாதார சரிவு அறிகுறி
ஆகஸ்ட் மாதத்தில் 22,000 புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டதாக தொழிலாளர் புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது, இது கணிக்கப்பட்ட 75,000 ஐ விடக் குறைவு. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் 21,000 ஆக திருத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் மற்றும் நுகர்வோர் செலவினம் நிலையாக இருந்தாலும், தொழில்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் 0.1% குறைந்தது. இதெல்லாம் அமெரிக்கா பொருளாதார சரிவை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் ஆகும்.
மிகப்பெரிய வீழ்ச்சி
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. பரஸ்பர வரிவிதிப்பால், 2வது நாளாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு அடைந்து உள்ளது. DOW JONES பங்குச்சந்தையில் 2000 புள்ளிகள் சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்க மற்றும் உலக மார்க்கெட் சரிவு குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். உலக மார்க்கெட் தினம் தினம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள தகவல் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
அதில், அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் ஐடி துறை பெரிய பாதிப்பை சந்திக்கும். ஐடி துறைக்கு சோறு போடும் நிறுவனங்கள் சரிவை சந்தித்தால்.. ஐடி நிறுவனங்களுக்கும் வருவாய் வராது. திட்டங்கள் முடங்கும். இது வேலைவாய்ப்பை காலி செய்யும்.
டாப் நிறுவனங்கள் அதிர்ச்சி
நேற்று அமெரிக்காவின் டாப் நிறுவனங்கள் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள். இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை விழுந்தால் அதை தொடர்ந்து இந்திய, இங்கிலாந்து போன்ற பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்று அவர் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications