நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவையே கதற விட்ட நபர்.. எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமை.. புடினின் மாஸ் முடிவு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன் தற்போது ரஷ்யாவில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு குடியுரிமை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

2013ல் அமெரிக்காவையே உலுக்கியவர் எட்வர்ட் ஸ்னோடன். அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் இவர் வேலை பார்த்து வந்தார்.

என்எஸ்ஏ மூலம் உளவு பார்க்க நிறைய கருவிகள் அங்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. சில உளவு பார்க்கும் சாப்ட்வேர்களை அமெரிக்காவின் என்எஸ்ஏவிற்கு உருவாக்கி கொடுத்ததே எட்வர்ட் ஸ்னோடன்தான்.

தீவிரவாத நடவடிக்கைகளை கண்டுபிடிப்பதற்காக அவர் சில சாப்ட்வேர்களை உருவாக்கி கொடுத்தார்.

கோவையில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டால்...நைசாக வானதி சீனிவாசனை கோர்த்துவிட்ட சிபி ராதாகிருஷ்ணன்! கோவையில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டால்...நைசாக வானதி சீனிவாசனை கோர்த்துவிட்ட சிபி ராதாகிருஷ்ணன்!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆனால் அந்த உளவு பார்க்கும் செயலிகளை வைத்து தீவிரவாதிகளை மட்டுமின்றி வேறு சிலரையும் அமெரிக்கா உளவு பார்த்துள்ளது. பல நாட்கள் அமெரிக்கா இப்படி தவறாக முறையின்றி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. இதை எல்லாம் ஆதாரத்தோடு வெளியிட்டவர்தான் எட்வர்ட் ஸ்னோடன். அமெரிக்கா செய்த உளவு வேலைகளை எல்லாம் அப்படியே ஒரு பென் டிரைவில் போட்டு அதை என்எஸ்ஏ அலுவலகத்திற்கு வெளியே கொண்டு சென்றார். பொதுவாக என்எஸ்ஏ அலுவலகத்திற்கு வெளியே எதையும் எடுத்து செல்ல முடியாது.

சாதனை

சாதனை

ஆனால் அங்கே இருக்கும் பாதுகாவலர்களை ஏமாற்றி அமெரிக்காவின் உளவு வேலைகளை எல்லாம் வெளியே கொண்டு வந்தார். அதில் இருக்கும் தகவல்களையும் அவர் வெளியிட்டார். இதையடுத்து அமெரிக்க அரசு இவரை கைது செய்ய முடிவு செய்தது. அமெரிக்க பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக கூறி இவரை கைது செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்தது. அதற்குள் எட்வர்ட் ஸ்னோடன் ரஷ்யாவிற்கு தப்பி ஓடினார்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் இவர் குடியேறி, அங்கே அகதியாக தஞ்சம் அடைந்தார். அமெரிக்காவின் சீக்ரெட்டுகளை வெளியிட்டதாக ரஷ்யாவும் இவருக்கும், இவரின் குடும்பத்திற்கும் தஞ்சம் கொடுத்தது. இவரை அமெரிக்கா அரசு தொடர்ந்து கேட்டு வந்தது. எங்கள் நாட்டிடம் திருப்பி கொடுத்து விடுங்கள் என்று அமெரிக்கா தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால் ரஷ்யா இதற்கு இணங்கவில்லை. மாறாக 2020ல் எட்வர்ட் ஸ்னோடனுக்கு நிரந்தர விசா கொடுத்தது.

குடியுரிமை

குடியுரிமை

இந்த நிலையில்தான் தற்போது எட்வர்ட் ஸ்னோடனுக்கு புடின் குடியுரிமை வழங்கி உள்ளார். 72 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கி உள்ளார். அந்த லிஸ்டில் எட்வர்ட் ஸ்னோடன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எட்வர்ட் ஸ்னோடன் ரஷ்ய குடிமகன் ஆகிறார். இவரின் மனைவி, குழந்தை இருவரும் தற்போது நிரந்தர விசா பெற்றுள்ளனர். அவர்களுக்கும் விரைவில் ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
USA whistle blower Edward Snowden gets Russia citizenship by President Putin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X