'குபேரன்' ஆக இருக்க வேண்டிய வெனிசுலா.. கையேந்தும் நிலை.. அமெரிக்காவின் 'நாட்டமை' அரசியல் பின்னணி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இன்றைய உலக வரைபடத்தை எடுத்து பார்த்தால் அமெரிக்கா ஆளுமை செலுத்தாத நாடுகளே இல்லை.. உலகின் நாட்டாமை போல் அமர்ந்து கொண்டு பல நாடுகளை கட்டுப்படுத்துகிறது.. பொருளாதார ரீதியாக ஒரு நாடு எப்படி நிலைகுலையச் செய்யப்படுகிறது என்பதற்கு வெனிசுலா ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.

ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் 'குபேரன்' என்று அழைக்கப்பட்டு வந்த நாடு, இன்று அடிப்படைத் தேவைகளுக்காகக்கூடப் போராடிக்கொண்டிருப்பது எதனால்? இதற்குப் பின்னால் இருக்கும் அமெரிக்காவின் ஆதிக்கம் என்ன என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் உள்ளன. அவற்றின் விவரங்கள் பற்றி பார்ப்போம்.

Venezuela The Fallen Kubera of Latin America Understanding the Politics of the U S Lifeline

அமெரிக்காவின் அசைக்க முடியாத பலம்

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, அமெரிக்காவை ஒரு நாடு ராணுவ ரீதியாக வீழ்த்துவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்ற ஒன்று. ஆனால், அமெரிக்கா தனது போரை ராணுவத்தைக் கொண்டு நடத்துவதை விட, 'பொருளாதாரத் தடைகள்' மூலமே நடத்துகிறது. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியான 'டாலர்' அவர்களின் கையில் இருப்பதால், அவர்கள் நினைத்தால் எந்த ஒரு நாட்டின் பொருளாதாரக் கதவையும் பூட்டிவிட இயலும்.

வெனிசுலாவின் மீது ஏன் இத்தனை அழுத்தம்

உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடு வெனிசுலா. ஆனால், அந்த நாட்டு மக்கள் இன்று வறுமையில் வாடக் காரணம் என்ன? டாலரில் எண்ணெய் வணிகம் மற்றும் அமெரிக்கா உடன் ஒத்துப்போவது போன்ற விஷயங்களில் சரியாக உள்ள அத்தனை வளைகுடா மற்றும் எண்ணெய் வளம் மிக்க நாடுகளும் மகிழ்ச்சியாக உள்ளன. ஆனால் அமெரிக்கா உடன் ஒத்துப்போகாத நாடுகள் சிக்கலை சந்திக்கின்றன

எண்ணெய் அரசியல்

வெனிசுலா தனது எண்ணெய் வளத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொடுக்க மறுப்பதும், ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டுவதும் அமெரிக்காவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, சீனா, அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டுவது விரும்புவது இல்லை.. அதேபோல் தனது அண்டை நாடுகள் இடதுசாரி கொள்கையுடன் இருப்பதையோ, சோசலிச கொள்கையுடன் இருப்பதையோ விரும்புவது இல்லை.. இதனால் தான் வெனிசுலாவிற்கு சிக்கல் வந்துள்ளது. அடுத்ததாக எண்ணெய் அரசியலும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்கா உடன் இணங்கி போக வெனிசுலா மறுப்பது தான் சிக்கலுக்கு காரணமாக இருக்கிறது

ஆட்சி மாற்றம்

வெனிசுலா அதிபர் மதுரோவின் ஆட்சியை சர்வாதிகாரம் என்று கூறும் அமெரிக்கா, தனக்குச் சாதகமான ஒரு ஆட்சியை அங்கு கொண்டு வரத் துடிக்கிறது. இதற்காக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட கடும் பொருளாதாரத் தடைகள், வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முடக்கி உள்ளது. வெனிசுலா மக்கள் அமெரிக்காவிற்கு பிடிக்காத மதுரோவை தேர்வு செய்து வருவதால் என்ன செய்வது தெரியாமல் தான் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கிறது.அங்கு ஜனநாயகமுறைப்படி தேர்தல் நடக்கவில்லை என்று கூறுகிறது. அத்துடன் பொருளாதார தடைகளை விதித்து முடக்குகிறது.

மனிதநேயமா? அதிகாரமா?

அமெரிக்கா வெனிசுலாவின் ஜனநாயகத்தைக் காப்பதாகக் கூறினாலும், சாதாரண மக்கள் மருந்துக்கும் உணவுக்கும் வழியின்றித் தவிப்பதுதான் நிதர்சனம். எந்த ஒரு நாடும் அமெரிக்காவைத் தாண்டித் தனித்து இயங்க முற்பட்டால், அவர்களுக்கு வெனிசுலாவின் நிலைதான் ஏற்படும் என்கிற ஒரு மறைமுக எச்சரிக்கையை அமெரிக்கா உலகிற்கு விடுத்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் வெனிசுலாவிற்கு முட்டுக் கொடுத்தாலும், அமெரிக்காவின் நிதித்துறை நெருக்கடியிலிருந்து அந்த நாடு மீள்வது என்பது தற்போதைக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

வெனிசுலா அவதிப்படுகிறது

வெனிசுலா அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொள்ள முடியாமல் அல்லப்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2026-ஆம் ஆண்டிற்கான கணிப்பின்படி, வெனிசுலாவின் சராசரி பணவீக்கம் சுமார் 682% ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டுகளை விடக் குறைந்திருந்தாலும், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகமானது. ஒரு பொருளின் விலை ஒரு நாளைக்குள்ளேயே பல மடங்கு உயரும் இத்தகைய சூழலில், சாதாரண மக்கள் தங்களின் சேமிப்பை ஒரே நாளில் இழக்கும் அவலநிலை அங்கு தொடர்ந்து வருகிறது.

இந்தியா எண்ணெய் வாங்குவது நின்று போனது

இந்தியா ஒரு காலத்தில் வெனிசுலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, குறிப்பாக 2019-ஆம் ஆண்டிலிருந்து, இந்திய நிறுவனங்கள் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்கத் தொடங்கின. அமெரிக்காவின் நேரடி எதிர்ப்பைச் சம்பாதிக்க விரும்பாததாலும், பணப் பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்களாலும் இந்தியாவின் இந்த முக்கிய எரிசக்தி ஆதாரம் கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்கே இன்று இந்தியா கடுமையான நிதி நெருக்கடியைஅமெரிக்காவிடம் சந்திக்கிறது. ஒருவேளை வெனிசுலாவிடமும் வாங்கியிருந்தால், அமெரிக்கா இந்தியாவை ஆட்டிப்படைக்க என்ன வேண்டுமானாலும் செய்யும்.

எந்த நாட்டிற்கும் ஏற்படலாம்

அமெரிக்காவின் இந்த மேலாதிக்கம் ஒருபுறம் "சர்வாதிகாரத்தை ஒழிப்பது" என்ற போர்வையில் இருக்கிறது.. மறுபுறம் அது ஒரு நாட்டின் இறையாண்மையையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைப்பதாகவே இருக்கிறது. கச்சா எண்ணெய் போன்ற இயற்கை வளங்களைக் குறிவைத்து ஒரு நாட்டின் மீது பொருளாதாரப் போர் தொடுப்பது என்பது அறமற்ற செயல் ஆகும். எந்த ஒரு நாடும் தனது சொந்த அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமை கொண்டிருக்க வேண்டும். வலிமையான நாடுகள் தங்களின் நலனுக்காகப் பலவீனமான நாடுகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவது உலக அமைதிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இன்று வெனிசுலாவிற்கு ஏற்பட்டது நாளை இந்தியா உள்பட எந்த நாட்டிற்கும் ஏற்படலாம் என்பதால், இதனை உலகம் கண்டிக்க வேண்டும் என்பதே உலக அரசியல் தலைவர்களின் வலிமையான குரல் ஆக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+