அவரு ‘வேலைனு வந்தா வெள்ளைக்காரன்’ பாஸ்.. ஆனா பாவம் தவறி நீச்சல்குளத்துல விழுந்துட்டாரே!
மணமக்களை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக் கலைஞர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூயார்க்: திருமண நிகழ்வை படம்பிடிக்கும் ஆர்வத்தில், புகைப்படக் கலைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் தவறி விழும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருமண நிகழ்வின் போது புகைப்படக் கலைஞர்கள் செய்யும் அலப்பறைகளை வைத்து ஒரு காமெடி எபிசோடே உருவாக்கலாம். அதுவும் தற்போது உள்ள இளம் புகைப்படக் கலைஞர்கள் படுத்துக்கொண்டு போட்டோ எடுப்பது, அந்தரத்தில் தொங்கிக்கொண்டு படம்பிடிப்பது என அட்ராசிட்டி செய்கிறார்கள்.
புதுமண ஜோடிகளும் நவீன மயமான புகைப்படங்களையே விரும்புவதால், அவர்களை திருப்திப்படுத்த இதுபோன்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள் போட்டோகிராப்பர்கள். திருமண நிகழ்வின் போது மணப்பெண்ணும், மணமகனும் செய்யும் அத்தனை விஷயங்களையும் விதவிதமாக படம் பிடிப்பது டிரெண்டாகிவிட்டது.

கட்டாயம்
இதுபோன்ற நிகழ்வுகளின் போது புகைப்படக் கலைஞர்கள் தவறி விழுவது, கேமராவை கீழே தவறவிடுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன. ஒரு சில நேரங்களில் புதுமண ஜோடிக்கு ஆபத்தாக முடிந்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் மக்கள் தங்களது வாழ்வின் முக்கியமான தருணத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் விதவிதமாக பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதால், புகைப்படக் கலைஞர்களும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.

திருமண வைபோகம்
அந்த வகையில் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் நிகழ்ந்த ஒரு திருமணத்தில், மணமக்களை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் தவறி நீச்சல் குளத்தில் விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு தனியார் வில்லாவில் நிகழ்ந்த அந்த திருமணத்தின் போது, மணப்பெண்ணும், மணமகனும் கைக்கோர்த்தப்படி நடந்து வருகிறார்கள்.

ரிவர்சில் நடை
அவர்களை படம்பிடிக்கும் பொருட்டு, பின் பக்கமாக அதாவது ரிவர்சில் நடந்தபடியே ஒளிப்பதிவாளரும், புகைப்படக் கலைஞரும் நடக்கிறார்கள். ஆனால் துரதர்ஷ்டவசமாக அவர்களுக்கு பின்னால் ஒரு நீச்சல் குளம் இருந்தது. இதை கவனிக்காத புகைப்படக் கலைஞர் முன்பக்கம் பார்த்தபடியேயோ தனது காலை தூக்கி பின்னால் வைக்க, அது நேராக நீச்சல் குளத்தில் போய்விட்டது.

அதிக ஆழமில்லை
இதனால் தடுமாறிய அந்த புகைப்படக் கலைஞர் அந்த நீச்சல் குளத்தில் விழுந்தார். நல்லவேளையாக அந்த நீச்சல் குளம் இடுப்பளவு மட்டுமே ஆழம் என்பதால் அவர் முழுமையாக உள்ளே செல்லாமல் சமாளித்து எழுந்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவருக்கும், அவரது கேமராவுக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

வைரலான வீடியோ
புகைப்படக் கலைஞர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததைப் பார்த்த மணப்பெண், மணமகன் உள்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். இந்த சம்பவத்தின் வீடியோவை சம்பந்தப்பட்ட புகைப்பட நிறுவனமே சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகிறார்கள். 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' என அந்த புகைப்படக்கலைஞரை பாராட்டவும் செய்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications