நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1 வாரத்தில் பாருங்கள்.. என்ன நடக்கிறது என்று.. Transitionல் டிரம்ப் வைத்த செக்.. பிடனுக்கு சிக்கல்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப்.. எப்படியாவது பதவியில் நீடிக்க தீவிரமாக முயன்று வருகிறார். தேர்தலில் இனிமேல்தான் முடிவுகள் வர போகிறது என்று டிரம்ப் அறிவிக்க தொடங்கி உள்ளார்.

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். 290 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ள பிடன்.. அடுத்த அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

214 வாக்குகளை மட்டுமே வென்று தோல்வி அடைந்துள்ள டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். உண்மையான தேர்தல் முடிவுகள் இனிமேல்தான் வரும் என்றும் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

விடாத பிடிவாதம்.. தொடர்ந்து இடையூறு.. பிடனை ஆட்சியமைக்க விடாமல் தடுத்து.. டிரம்ப்பின் அட்டகாசம்..!விடாத பிடிவாதம்.. தொடர்ந்து இடையூறு.. பிடனை ஆட்சியமைக்க விடாமல் தடுத்து.. டிரம்ப்பின் அட்டகாசம்..!

வழக்கம்

வழக்கம்

பொதுவாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நவம்பர் முதல் வாரத்தில் வரும். அதன்பின் ஜனவரி மாதம் புதிய நபர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பார். இந்த இரண்டு மாதத்தில்.. அமெரிக்காவில் Transition நடைமுறைகள் நடக்கும். Transition என்பது நடப்பு அதிபர் .. வருங்கால அதிபராக பதவி ஏற்கும் நபருக்கு போதிய தகவல்கள், விவரங்கள் அனைத்தையும் வழங்கி.. பதவி ஏற்க வழி விடும் நடைமுறையாகும்.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக தேசிய அளவில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளது, இவ்வளவு நிதி உள்ளது, பதவி ஏற்றதும் இதை எல்லாமே கவனிக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் தொடங்கி உளவு தகவல்கள் வரை கொஞ்சம் கொஞ்சமாக பழைய அதிபரிடம் இருந்து புதிய அதிபருக்கு செல்லும். இதற்காக பழைய அதிபர் Transition குழு ஒன்றை அமைப்பார். இந்த Transition குழு.. புதிய அதிபரின் குழுவுடன் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக செயல்படும்.

நிதி

நிதி

நிதி ஒதுக்கீடு, அதிகாரிகளை பயன்படுத்தும் அதிகாரம் உட்பட பல விஷயங்கள் இந்த Transition குழு மூலம் மட்டுமே வழங்கப்படும். ஆனால் அதிபர் டிரம்ப் உருவாக்கி இருக்கும் Transition குழு இன்னும் பிடனுக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. புதிய அதிபருக்கான நிதி, அதிகாரிகளை பயன்படுத்தும் அதிகாரம் என்று எதையும் டிரம்பின் Transition குழு பிடனுக்கு வழங்கவில்லை .

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த குழுவின் தலைவர் எமிலி மர்பி அதிபர் டிரம்ப் மூலம் நியமிக்கப்பட்டவர். இவர் பிடனை இன்னும் சந்திக்க கூட இல்லை. இதனால் அதிபர் பதவியில் பிடன் பதவி ஏற்பது அவ்வளவு எளிதான காரியமாக தெரியவில்லை. இதனால் ஜனவரி மாதம் பிடன் எப்படி பதவி ஏற்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. அதோடு, பிடன் வெற்றி பெறவே இல்லை என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

நாங்கள் வெற்றிபெற போகிறோம்.. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் முடிவுகள் வரும். நாங்கள் அதில் முன்னேற்றம் பெற்று வருகிறோம்.. ஒரு வாரத்தில் பாருங்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார். தேர்தல் முடிவிற்கு எதிரான வழக்குகளை குறிப்பிட்டு டிரம்ப் இப்படி பேசி உள்ளார். தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமல் பல மாகாணங்களில் வழக்கு தொடுக்கும் திட்டத்தில் டிரம்ப் இருக்கிறார்.

டிரம்ப் திட்டம் என்ன

டிரம்ப் திட்டம் என்ன

ஏற்கனவே சில மாகாணங்களில் டிரம்ப் வழக்கு தொடுத்துவிட்டார். இந்த நிலையில்தான் விரைவில் தேர்தல் முடிவுகள் மாறும் என்று டிரம்ப் நம்புகிறார். இதற்கு சாத்தியம் இல்லை என்றாலும் கூட.. அதிபர் டிரம்ப்பின் இந்த செயலை குடியரசு கட்சியினர் ஆதரிக்க தொடங்கி உள்ளனர். டிரம்ப் செய்வது சரிதான். அவர் தோல்வி அடையவில்லை. அவர்தான் வெற்றிபெற்றுள்ளார்.. விரைவில் இதற்கான முடிவுகள் வரும் என்று அவர்களும் கூற தொடங்கி உள்ளனர்.

English summary
We will win says US President Trump: Stops transition process to Elected Joe Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X