Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக நாடுகள் பார்க்க.. ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்திய டிரம்ப்.. கடுப்பில் ஐரோப்பா, நேட்டோ படைகள்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சர்வதேச நாடுகள் பார்க்கும் வகையில் மீடியா முன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவமானப்படுத்தி உள்ளார். மற்ற நாடுகளுக்கு இதை செய்வதை விட.. அமெரிக்காவின் நட்பு நாடு ஒன்றிற்கு அவர் இதை செய்ததுதான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடு.. அமெரிக்காவின் நட்பிற்காக உக்ரைன் தனது பழைய அண்ணன் ரஷ்யாவையே பகைக்க துணிந்தது. அதோடு இல்லாமல் ரஷ்யாவின் போருக்கு கூட அஞ்சாமல் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைய முயன்றது. ஆனால் இப்போது அதே உக்ரைனை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக அவமானப்படுத்தி உள்ளார்.

donald trump vladimir putin ukraine russia war

மிக மோசமான வார்த்தைகளால் உக்ரைன் அதிபரை அவமானப்படுத்தி உள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் எந்த உலக நாட்டு தலைவருக்கும் இப்படி ஒரு மோசமான சம்பவம் நிகழ்ந்ததே கிடையாது.

சண்டையில் என்ன நடந்தது?

இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். நேற்று வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.

இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜாங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.

இதற்கு பதிலடி தந்த டிரம்ப், அதிபர் டிரம்ப் - உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.

இதற்கு கோபமாக பதில் சொன்ன ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி என்றுள்ளார்.

டிரம்ப் - அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.


நேட்டோ, ஐரோப்பா ஷாக்

மற்ற நாடுகளுக்கு இதை செய்வதை விட.. அமெரிக்காவின் நட்பு நாடு ஒன்றிற்கு அவர் இதை செய்ததுதான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.ஐரோப்பா, நேட்டோ படையில் உள்ள மற்ற உலக நாடுகளை இது கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

அடுத்து எங்களையும் இப்படித்தான் நடத்துவார். நேட்டோ படையில் உள்ள நாடுகளை டிரம்ப் காக்க மாட்டார். சமீபத்தில்தான் ஐநாவில் உக்ரைனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யா, அமெரிக்கா ஒன்றாக சேர்ந்து இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் சண்டையால் உருவாக இருந்த உலகப்போரை டிரம்ப் தடுத்து உள்ளார். ஆனால் நேட்டோவை டிரம்ப் கிட்டத்தட்ட காலி செய்துவிட்டார். டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.

நேட்டோவை பகைத்து ரஷ்யாவுடன் அமெரிக்கா நெருக்கமாகி உள்ளது. இப்போது உக்ரைனை அவமானப்படுத்தி ரஷ்யா - அமெரிக்கா கிட்டதட்ட நண்பர்களாகவே மாறிவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+