நண்பர் மோடிக்கு.. நாங்க எதுக்கு ரூ.181 கோடி கொடுக்கணும்.. புரியலையே.. கடுப்பில் சீறிய டிரம்ப்
நியூயார்க்: இந்தியாவில் வாக்காளர் சதவிகிதத்தை பெருக்குவதற்காக 21 மில்லியன் டாலர் செலவு செய்தது ஏன் என்றே தெரியவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் வங்கதேசத்திற்கு 29 மில்லியன் டாலர் அரசியல் அமைதிக்காக, சிரத்தன்மைக்காக செலவு செய்தது ஏன் என்றும் தெரியவில்லை என்று விமர்சனம் வைத்துள்ளார்.
அவர் வைத்துள்ள விமர்சனத்தில், கடந்த ஆட்சியில் பல லட்சம் கோடிகள் அனாவசியமாக செலவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் வாக்காளர் சதவிகிதத்தை பெருக்குவதற்காக 21 மில்லியன் டாலர் செலவு செய்தது ஏன் என்றே தெரியவில்லை. எனது நண்பர் மோடிக்கு 21 மில்லியன் டாலரை அனுப்பி உள்ளனர். இந்த பணத்தை ஏன் அனுப்பினார்கள் என்று புரியவில்லை, என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.

இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கிவந்த 180 கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தம் செய்யப்படுவதாக டிரம்பால் நியமிக்கப்ப்பட்ட எலான் மஸ்க் தலைமையிலான DOGE குழு முடிவு செய்துள்ளது. இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்று உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாக அளித்த பேட்டியில், நாம் ஏன் இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. நம்மைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று; இந்தியாவின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாம் அங்கு பிஸ்னஸ் செய்ய முடியாது. இந்தியா மற்றும் அவர்களின் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஏன் நாம் பணம் கொடுக்க வேண்டும்.
வாக்காளர்களுக்கு 21 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவில் வாக்காளர்கள் எப்படி வாக்களித்தால் நமக்கு என்ன? அமெரிக்கர்களின் வரி பணத்தை இதற்காகவெல்லாம் செலவழிப்பதை விரும்ப முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது., என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப் நிதி நிறுத்தம்
உலகம் முழுக்க உள்ள பல நாடுகளுக்கு வழங்கப்படும் USAIDஐ நிறுத்துவதாக அமெரிக்க அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா செலவிட்ட தொகையை நிறுத்தி உள்ளது. வழங்கிவந்த 180 கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தம் செய்யப்படுவதாக டிரம்பால் நியமிக்கப்பட்ட எலான் மஸ்க் தலைமையிலான DOGE குழு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவின் நிதி இந்தியாவில் உள்ள 3ம் பாலின மருத்துவமனைகளுக்கு செலவு செய்யப்படுவதாக DOGE தலைவர் எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்கான நிதியை நிறுத்துவதாகவும் மஸ்க் அறிவித்து இருந்தார். சரியாக பிரதமர் மோடி மஸ்க்கை சந்தித்த 48 மணி நேரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அமெரிக்க பொதுவாக உலக நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும். பல திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவி வழங்கும். இதை சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதி என்று அழைப்பார்கள்.
இந்த நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதியை முடக்கும் முடிவை எடுத்து உள்ளார். இதனால் உலக எதற்கும் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பெற்று வந்த நிதியும் பாதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் பிற திட்டங்கள் தொடர்பாக இந்தியா பெற்று வந்த நிதி பாதிக்கப்படும் என்பதால் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அமெரிக்க நிதியில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொண்டு நிறுவன செயல்பாடுகள், சில அரசு செயல்பாடுகள் என்று எல்லாம் முடக்கப்பட்டு உள்ளன. USAID எனப்படும் இந்த நிதி காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
USAID இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல பணிகளை செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், USAID மூலம் இந்தியா $140 மில்லியனைப் பெற உள்ளது. கடந்த ஆண்டு இதே தொகையை பெற்றது. இதை எல்லாம் இந்தியா மொத்தமாக இழக்கும். அதாவது கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை இந்தியா இழக்கும்.
-
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications